Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Monday, October 31, 2016

மொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...!


தற்போது உள்ள சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.



இது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.

இணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.

இதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
அனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.

ஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.

அதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.

இதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.

பல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.

நீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.

ஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.

Parental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.

இதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.

தடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.

மேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u