Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, November 10, 2018

"3" Apple Changes the World!!!


Share:

Wednesday, September 5, 2018

Hacking - Cyber Club

Everybody has a hacking capability. And probably every intelligence service is hacking in the territory of other countries. But who exactly does what? That would be a very sensitive piece of information. But it's very difficult to communicate about it. Because nobody wants to admit the scope of what they're doing.

-Henry Kissinger
                                                    "Don't hate the Hacker, Hate the Code"
Share:

Tuesday, September 4, 2018

ஆசிரியர் தினம்

Related image
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம்
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
Share:

Sunday, September 2, 2018

உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது!

நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல. ஒருவரது ஃபேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப் பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

நட்பு வளையம்

ஃபேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள்தானே நாம் பகிரும் தகவல்களைப் பார்க்க முடியும்? அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் ஃபேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தத் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள். யாரோ ஒரு ஃபேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் ஃபேஸ்புக் முகவரி மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் ஃபேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்தத் தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருந்தால், அந்தத் தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என்று பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், காணொலிகள், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் ‘டேக்’ செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம். அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்தப் படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் ‘லைக்’ செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டம் அளித்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார், எந்தக் குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

ஃபேஸ்புக் தேடல்

ஃபேஸ்புக் உறுப்பினர் முகவரியைச் சமர்ப்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாகத் திரட்டப்பட்ட தகவல்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக்காட்டுகிறது. ஒவ்வொரு வகையாகத் தேர்வு செய்து ஆய்வு செய்து பார்க்கலாம்.

பொதுவாக ஃபேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன்தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்துகொள்கிறோம். விவாதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், ஃபேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்குப் பொதுவெளியில் சிதறிக் கிடக்கின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. இதைத்தான் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையச் சேவை அம்பலப்படுத்துகிறது. ஃபேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், இந்தத் தளம் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. ஃபேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காணக் கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது, அவ்வளவே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த அடையாளம் காட்டுதலையும் ஃபேஸ்புக் வழங்கும் தேடல் வசதி கொண்டே சாத்தியமாக்குகிறது.

அதாவது இந்தத் தேடலுக்கு இந்தத் தளம் கண்டிப்பாகத் தேவை என்றில்லை. 2013-ம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகம் செய்த‌ ‘கிராஃப் சர்ச்’ தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களைத் தேட முடியும். அப்படித் தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

நல்லெண்ண ஹேக்க‌ர்

ஃபேஸ்புக் பயன்பாட்டின் தனியுரிமை அம்சம் தொடர்பான‌ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தளம் முயற்சிக்கிறது. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஆன்தி த க்யூக்லேர் எனும் நல்லெண்ண ஹேக்க‌ர் இந்தச் சேவையை உருவாக்கியிருக்கிறார். கிராஃப் சர்ச் தேடலின் வீச்சும், பிரச்சினையும் பரவலாக அறியப்படாமல் இருப்பதால், சாதாரண இணையவாசிகளும் இதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தச் சேவையை உருவாக்கியதாக ‘மதர்போர்ட்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான சாமானியர்களுக்குத் தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிந்துணர்வு இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘யூஸர் ஃப்ரெண்ட்லி’யாக‌ இந்தச் சேவையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராஃப் சர்ச் அறிமுகமானபோது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காகப் பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் ஃபேஸ்புக் இந்தத் தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராஃப் சர்ச் தேடலைப் பயன்படுத்தி, தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதைத்தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தச் சேவை ஃபேஸ்புக்கின் தனியுரிமைக் கொள்கையை மீறவில்லை என்றும், பொதுவெளியில் பார்க்கக்கூடிய, ஆனால் மறைந்திருக்கும் தகவல்களை மட்டுமே காட்டுவதாகவும் தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, ஃபேஸ்புக் பயனாளி, தான் பகிரும் தகவல்களை நண்பர்கள் பார்வைக்கு மட்டும் என அமைத்திருந்தார் என்றால், அதற்குள் யாரும் எட்டிப் பார்க்க முடியாது. ஆனால் எப்படிப் பகிர்ந்துகொள்கிறோம் என அறியாமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்களின் தகவலை எல்லோரும் பார்க்க முடியும்.

நீங்களும் உஷார்

நீங்களும்கூட இந்தத் தளத்தில் உங்கள் ஃபேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் ஃபேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்குக் கடை பரப்பி வைக்கப்படுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதிகத் தகவல்கள் இல்லை எனில், நீங்கள் தனியுரிமை அமைப்பை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள் எனத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களைத் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கான தனியுரிமைப் பாதுகாப்பு போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும்போது அல்லது பின்னூட்டம் அளிக்கும்போதும்கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது. 

இதற்கான இணைய முகவரி: https://www.facebook.com/help/443357099140264 
இணையதள முகவரி: https://www.stalkscan.com/
Share:

Apple acknowledges iPhone 8 Logic Board Issues, Offers free repairs

It's no secret that Apple sells a lot of devices each year so even if the company says there's an issue affecting a small percentage of the devices, we might be talking hundreds of thousands of handsets, or even millions. However, this time around, the acknowledged issue concerning the iPhone 8 might not really be that widespread like some in the past.

In an official statement, Apple says there's a logic board issue in some of the iPhone 8 units manufactured between September 2017 and March 2018 - essentially, the handsets sold in the first six months. Users are reporting freezing, sudden system reboots and failure to boot. If you experience some of these issues, you can visit Apple's website and check if your iPhone 8 is affected. You can find the link in the source below.
If your device is eligible for a repair, you need to take it to your local service center. But keep in mind that if there's some physical damage to the handset such as a cracked screen, you will have to pay for the panel's repair before changing the logic board. If it's not damaged, you will probably receive a replacement unit for free.
Also keep in mind that the "Logic Board Replacement Program" is strictly for iPhone 8 devices only - iPhone 8 Plus handsets are not suffering from the same issue.
Share:

Windows Tip - Hide Files or Folders Quick with a Right Click

Share:

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி – எந்த சாதனமும் இன்றி!

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.

இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.

இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்

Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://virtualrouter.codeplex.com/

2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்

அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்

Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். 

மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.

3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.
Share:

உங்கள் PC யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி?

உங்கள் புதிய கணினியில் நீங்கள் கொஞ்சம்கூட பயன்படுத்தாத பல ப்ரீலோடட் ஆப்ஸ்கள் ஏன் உள்ளது என்பதை பற்றி நீங்கள் ஆச்சரியப்பட்டது உண்டா.? அதற்கு காரணம் வேறொன்றுமில்லை பிராண்டட் பிசி உற்பத்தியாளர்களுக்கு பணம் பார்க்கும் சில வழிகளில் ப்ரீலோடட் ஆப்ஸ்களை ஒன்றாகும்.

அவ்வகை பயன்பாடுகளை வாங்கும் பயனாளிகள் அதிக அளவில் பயன்படுத்துவார்களா இல்லையா என்ற எந்தவிதமான எண்ணமும் இன்றி புதிய பிசி-க்களில் பதிவேற்ற படுவது தான் - ப்ரீலோடட் ஆப்ஸ். அப்படியாக உங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தமிழ் கிஸ்பாட் டூடோரியல் தொகுப்புகளில் ஒன்றே இது.!

பயன்படுத்தப்படாத மென்பொருள்களை / ஆப்ஸ்களை ப்ளோட்வேர் என்பர், சரி இந்த ப்ளோட்வேர்களை கண்டறிவது எப்படி.? 

1. நீங்கள் நீக்க வேண்டிய பயன்பாடுகள் எது என்று உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் எளிதாக கண்ட்ரோல் பேனல்> ப்ரோகிராம்ஸ் & பீச்சர்ஸ் சென்று உங்களால் தேவையில்லை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரோகிராம்களை கிளிக் செய்து அன்இன்ஸ்டால் செய்யலாம். 

2. மாறாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட பயன்பாடு பயனுள்ளதா.? இதை நீக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய தெளிவில்லாமல் இருந்தால் நீங்கள் உங்கள் கணினியில் 'ஷூட் ஐ ரிமூவ் இட்' என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கலாம். அதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

3. நீங்கள் பயன்பாட்டை நிறுவிய பின்னர், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் ஒரு பட்டியல் உங்களுக்கு காண்பிக்கப்படும். உடன் குறிப்பிட்ட ஆப்பை எத்தனை பயனர்கள் இதுவரை நீக்கியுள்ளனர் என்ற தெளிவான பட்டியில் உங்களுக்கு காண்பிக்கப்படும். 

4. அதில் உங்களுக்கு தேவையில்லாத அல்லது உங்களால் மட்டுமின்றி பெரும்பாலானோர்களால் நீக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்பை நீக்க வெறுமனே அதை அன்இன்ஸ்டால் செய்தால் போதும்.
Share:

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி...

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்
முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். 
பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.


நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும். கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்

அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server) என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் – 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.

அந்த கணினியை வலது கிளிக் செய்து Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் – 12345@12345) அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.

இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.

ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
Share:

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.
Related image
சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.

தப்பிக்க வழிகள்!!

இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.

ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை

எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.

வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்

கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.

புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை...

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலைIP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Categories

Recent Posts

Copyright © சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u