சாலையில் செல்லும் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி “கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்" என்று சொல்லாமல் சொல்லவே மஞ்சள் நிறம் பள்ளிப்பேருந்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மட்டுமில்லாமல், இப்பேருந்துகள் இயங்கும் அதிகாலை/மாலை நேரங்களில் மற்ற வண்ணங்களை விட மஞ்சள் நிறமே பளிச்சென்று தெரியக்கூடியது.
பள்ளிப்பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் கொடுக்கும் இந்தப்பழக்கம் 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் துவங்கப்பட்டது.
கொலம்பியா யுனிவர்சிட்டியில் பணியாற்றிய பேராசிரியர் Dr. Frank W. Cyr என்பவர் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிப்பேருந்துகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் பல பள்ளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான் இந்த மஞ்சள் வண்ணம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் “Father of the Yellow School Bus” என்றே பேராசிரியரை அழைக்கின்றனர்.