1. தேவையான புகைப்பட ஃபைலையும், தகவல் அடங்கிய ஃபைலையும் தயார் நிலையில் வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, இங்கு டாக்டர் அப்துல்கலாம் புகைப்படத்தை Kalam.JPG என்ற இமேஜ் ஃபைலிலும், ‘Dream, Dream, Dream’ என்ற அவரது வலியுறுத்தலை Quote.Txt என்ற டெக்ஸ்ட் ஃபைலிலும் தயார் நிலையில் D என்ற டிரைவில் வைத்துக்கொள்ளலாம்.
2. Start பட்டனை கிளிக் செய்து சர்ச் பாரில் CMD என்று டைப் செய்து Command Prompt என்ற விண்டோவை வெளிப்படுத்திக்கொள்ளலாம். அல்லது Start > Accessories > Command Prompt என்ற விவரத்தை கிளிக் செய்தும் Command Prompt என்ற விண்டோவை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
3. இந்த Command Prompt விண்டோவில், பொதுவாக விண்டோஸில் மவுஸை கிளிக் செய்து நாம் முடிக்கின்ற பணிகளை, கட்டளைகளாக (Commands) டைப் செய்து முடிக்க முடியும்.
4. இந்த விண்டோவில் D: (D மற்றும் கோலன் இரண்டையும் டைப் செய்ய வேண்டும்) என்ற டிரைவின் பெயரை டைப் செய்துகொள்ள வேண்டும். ஏன் எனில் நாம் D டிரைவில்தான் ஃபைல்களை வைத்துள்ளோம். இப்போது D டிரைவ் வெளிப்படும். இப்போது Copy /b Kalam.Jpg + Quote.txt KalamPhoto.Jpg என டைப் செய்துகொள்ள வேண்டும். உடனடியாக Kalam.Jpg என்ற இமேஜ் ஃபைலில், Quote.txt என்ற டெக்ஸ்ட் ஃபைலில் உள்ள தகவல் ஒளித்து வைக்கப்பட்டு KalamPhoto.JPG இமேஜ் ஃபைலாக காப்பி செய்யப்படும். இப்போது Command Prompt விண்டோவில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
5. விண்டோஸில் D டிரைவுக்குச் சென்றுபார்த்தால் KalamPhoto.JPG என்ற இமேஜ் ஃபைல் உருவாகி இருப்பதைக் காணலாம்.
6. அந்த இமேஜ் ஃபைலை NOTE PAD சாஃப்ட்வேரில் திறந்து பார்த்தால் அதில் எழுத்துக்களும், எண்களும் தாறுமாறாக வெளிப்படும். அதன் அடியில் கடைசியாக Quote.txt என்ற டெக்ஸ்ட் ஃபைலில் நாம் டைப் செய்திருந்த ரகசிய தகவலான Dream, Dream, Dream என்பது இணைந்திருப்பதைக் காணலாம்.
குறிப்பு
ஸ்டெகனோகிராஃபி முறையில் தகவல்களை ரகசியமாக வெளிப்படுத்த ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்ஸ்களும் உள்ளன. இங்கு உதாரணத்துக்கு, QuickStego என்ற ஸ்டெகனோகிராஃபி சாஃப்ட்வேரை விளக்கியுள்ளேன். ஸ்டெகனோகிராஃபி செய்ய எந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்துகிறோமோ, அதே சாஃப்ட்வேரைப் பயன்படுத்தித்தான் ஃபைலில் உள்ள ரகசிய தகவலை படிக்க முடியும்.
எனவே, சாஃப்ட்வேர் இல்லாமலும் ஸ்டெகனோகிராஃபி செய்யும் முறையை விளக்கி உள்ளேன்.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.