பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது.
ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், இத்தகைய பைல் நீக்கம் என்பது என்ன என்று பார்த்தால், கேள்விக்கு விடை கிடைக்கும். பைல் ஒன்றை நிரந்தரமாக நீங்கள் அழிப்பதாக நினைத்து அழிக்கையில், அந்த பைல் அழிக்கப்படுவதில்லை. அந்த பைலை விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைக்கும் தொடர்புகளே அழிக்கப்படுகின்றன.
அழித்த பைலை மீட்டுத் தரும் புரோகிராம்கள், இந்த லிங்க்கினை மீண்டும் அது நீக்கப்பட்ட வழியில் பின்னோக்கிச் சென்று கண்டறிகின்றன.
பின்னர், அதன் மூலம், பைலை மீட்டுத் தருகின்றன.
இந்த வகையில் Recuva என்னும் புரோகிராம், மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
இந்த புரோகிராமினை இயக்கி, ஸ்கேன் செய்திட கட்டளை கொடுக்கையில், அது அப்போதைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, மீட்கப்படக் கூடிய அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டறிந்து பட்டியல் இடும்.
அழிக்கப்பட்ட பைல்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் இயக்கம், எதிர்பாராத நிலையில், முடக்கப்பட்டு செயல் இழந்து போகையில், அழிக்கப்படும் பைல்களையும், இந்த புரோகிராம் மீட்டு எடுத்துத் தரும்.
எனவே, ரெகுவா அப்ளிகேஷன் புரோகிராம், கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு புரோகிராம் ஆகும். இதனை இலவசமாகவே, இதன் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் வசதிகளுடன் கூடிய புரோகிராம் 20 டாலர் கட்டணத்தில் கிடைக்கிறது.