Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Monday, June 5, 2017

உலக சுற்றுச் சூழல் தினம்



உலக சுற்றுச் சூழல் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 2017ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை "Connecting People to Nature - இயற்கை மக்களை இணைக்கும்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.
Share:

Thursday, April 20, 2017

உழவுத் தொழில்(தந்தை மகனுக்கு...)


வேளாண்மை, 
புராதனத் தொழில் - இன்று
புறக்கணிக்கப்பட்ட தொழில்....
காய்ந்து வெடித்த 
வயல் வெளிகளும் - அதனால்
அழுது அழுது
ஓய்ந்து துடித்த
கயல் விழிகளுமாய்
முப்போகம் விளைந்த பூமி - இனி
எப்போது விளையும் என்ற
ஏக்கப் பெருமூச்சுமாய்
உழவர்களின் வாழ்க்கை!
வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன்
மிதிக்கிறான்,
மேலாண்மை செய்பவனை
வேளாண்மை செய்பவன்
துதிக்கிறான்.
பழக்கப்பட்டவரிடம்
சோகத்தைச் சொல்லி அழுவதை
வழக்கமாகக் கொண்டவர் நாம்!
பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்
சோகத்தை யாரிடமாவது
சொல்லி அழலாமென்றால்
உறவென்று யாரும்
ஒட்டுவதில்லை.
உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளைத் தள்ளும் நாடகமே
நடைமுறை!
வேரோடு வேராக
வளரும் பயிருக்குள்
ஒன்றி விடும் உழவர்கள்.....
வயிறு ஒட்டி
சோகம் அப்பி
தேகம் மெலிந்த
இவர்கள் தான் - இந்த
தேசத்தின் வேர்களாம்?
நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்
வேருக்கு வீழ்ச்சியென்றால்
எப்படியடா ரசிப்பது?
கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன;
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.
தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!
இருந்தாலும் இங்கே
கழனிகள் எல்லாம்
மதிப்பிழந்தாச்சு;
கணினிகள் மட்டும்
மதிப்புப் பெற்றாச்சு....
குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில் 
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
விவசாயக் கூலிகளின் 
வேதனைப் பற்றியும்
விவசாயிகள் வேதனை பற்றியும்
அவரவர் அன்றி
வேறு எவரும்
கவலை கொள்ளார்.
கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!
கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும் - அந்தக்
காய்ந்த நிலப்பரப்பைக்
காண நேர்ந்தால் 
அதிலும்
நம்பிக்கை விதைத்து
கனிகள் விளைவித்து
உயிர் வாழ்வை
உறுதி செய்தோரின்
உயிர் வாழ்க்கை
உத்திரவாதமின்றி
ஊசலாட்டத்தில்.....
கலப்பை மாறி "டிராக்டர்" ஆச்சு
கமலை மாறி "மோட்டார்" ஆச்சு
விதைகள் மாறி "வீரியம்" ஆச்சு
விவசாயிகள் வாழ்க்கை மட்டும்
வீழ்ந்திடல் ஆச்சு
விளைபொருள் கூட
கூர்த் தீட்டிய
கொலைக் கருவியாய்
விவசாய இறக்குமதியில் இன்று?
இத்தனை சோகமும்
பார்த்த பின்னும்
காலம் மறந்து
கண்மூடி வாழ்ந்து
மரித்த பின்
மண்மூடிப் போகவா
வாழ்க்கை
?



Share:

Wednesday, March 1, 2017

Understanding the FileCloud

Image result for file cloud

Introduction


FileCloud is a highly scalable on-premises, self-hosted Enterprise File Sharing and Sync solution.
A private cloud solution such as FileCloud offers the same features and advantages of public cloud services, but doesn’t have many of the drawbacks of cloud computing services which include issues related to control over critical enterprise and customer data, concerns about security, and issues connected to regulatory compliance for many industries.  
FileCloud allows you to run your own private cloud storage and sync solution for your employees, customers and clients allowing complete control of your organizational data. FileCloud also allows you expose your existing organizational folder and file shares (Windows NTFS File Shares, CIFS, NFS etc) outside via a web portal and via mobile apps without using VPN.

Software Requirements


The following OS's are supported for running FileCloud
  • Windows Server 2008 R2 64 bit, Windows 2012 64 bit (& R2), Windows 7 64 bit, Windows 8 64 bit
  • Ubuntu Linux 14.04 LTS 64 bit 
  • CentOS 7.x 64 bit or greater


Hardware Requirements


FileCloud has fairly reasonable system requirements for small installation (~ 100 users)
  • Dual Core CPUs (2 GHz or higher) (Recommended Quadcore)
  • 8 GB of RAM (higher is better)
  • Storage can be from Physical Disk, SAN, NAS etc
  • Free disk space as needed
For larger installations, you might need to setup more powerful configurations to support FileCloud. 




Share:

Friday, February 24, 2017

Azure Tutorial; Be in cloud

Azure Tutorial; Be in cloud

Microsoft in Cloud; Azure

As on today, cloud is what everyone talking about. This is one technology where everyone have a different view. Some say that it is a new technology that will take upon the future and some say that this is nothing new but just the old techniques put in  a different combination and even better some say its better it's just a marketing gimmick. But I would say it's everything and we will find about it more better.

Evolution

Cloud computing is what we see today is nothing but an evolution which started almost 3 decades back. To put a brief description, it's the combination of Autonomic ComputingGrid ComputingUtility ComputingVirtualization and Para virtualization. If your provider is not providing all these facilities as a part of what he calls as cloud, then you are not in cloud. Each and every technology originated at their own time and finally paved the way to evolve as a cloud and that is what we have today.

What Does Cloud Provide

Whenever  a technology or technique gets released and being discussed as a hot topic over market, there will be always a debate on calling it as a boon or curse and sometimes its nothing but a pack of unwanted options for few. But technology has to be always seen as whether it solves one's need or not and that can differ from person to person. So how does cloud help me or what does it have?

Infrastructure as a Service (IaaS)

Infrastructure is considered as a major investment for any corporates or SME. But for smaller corporates and SMEs this can be a nightmare and inefficient machines or support engineers can put their whole business into jeopardy.  Every year there are millions of dollars ruined because of a inefficient / careless or a juvenile network or system support personnel. But to hire the best, you will need another major investment to be put and finally you will end up spending more money for maintaining your infrastructure rather maintaining your business. Any vendor who already run a web hoisting service or data center can upgrade their process to get into this business.
Fortunately you get this as a service in the market with many service providers. Now lets see what will you get as a part of IaaS.
  • Hardware and Operating System which are required for you to run your application will be provided by the vendor.
  • Hardware, connectivity or failover will be the responsibility of the vendor but they are subjected to differ by vendor and the subscription.
  • Software and the application you will need to run will be your (client's) responsibility. Anything which is down / crashed with respect to that will be your responsibility and most of the vendors don’t entertain in helping you on that.

What does Microsoft Provide

Microsoft is yet to get into this business. But we are definitely going to enter with a huge bang and you can expect us very shortly.

Platform as a Service (PaaS)

Now this is a trickier and the most intuitive technology / service that one have to provide. Here you will get all the infrastructure and the software/ service will not bother you anymore. In most the cases the infrastructure is totally transparent to the client and all he sees is nothing but a url where his application is running.
Below are the features you get as a part of this service.
  • Hardware, Operating and all the software that would be as the part of vendor platform will be taken care of himself.
  • Client doesn’t have to pay for the license of the Operating system or the platform.
  • The only part that the client can control is the app he has built using the vendor's platform.

What Does Microsoft Provide

Microsoft Azure is the brainstorm of this service. Unlike other providers, Azure is integrated with the world's most widely used programming technology (.net). And any .net programmer can take the advantage of the technology to have his application on cloud. We will discuss more on Azure as we walkover.

Software as a Service (SaaS)

This is one most popular service available in the web and there are many vendors and many applications which are taking this approach. Initially when you wanted to have applications, you would require to buy or subscribe and installed over your own machine or network and avail it's usage. Now with this service, your data is taken to the cloud and the vendor will provide the service through the cloud.
Below is what you get with this service.
  • Hardware, operating system and platform is totally hidden from the client.
  • All the infrastructure and platform licensing and maintaining is taken by the vendor.
  • The client will avail the service using subscription and work with the software over web.
  • The licensing will be more pronounced as subscription per user or anything else depending on the SLA.

What does Microsoft Provide

Microsoft is already having a huge share on market with this service. Office Live is a free service available to any live id where you can edit or create office applications online. BPOS and Office 365 is another subscribed application on the cloud through which Microsoft takes the whole back office functioning to cloud and the user doesn’t have to worry about the infrastructure or software licensing. Windows Intune will  be the next service (already in beta) to be added soon to cloud.

Advantages

As already discussed, the advantages and disadvantages a technology will make is mostly with respect to the perspective and necessity of the user. However, lets try to find out what are the advantages you will get to enjoy being in cloud.
Please do remember that existing technologies will also have the features which we are going to discuss below but, it's the entire feature set which you get in a single technology is what makes a difference.

Infrastructure Overhead & Cost

As discussed earlier, for any company this would be the worst nightmare of the business. Infrastructure creation and maintenance might sound easy but for any financial officer who runs the business will definitely understand the pain he has to go into in keeping the back office running and up to date. With the infrastructure put into the cloud where you don’t have to worry about keeping it updated and maintaining and data backup, this would definitely help any organization which doesn’t have a full fledged infrastructure or a capable support person or which doesn’t have a budget for huge investment.
Think about forgetting space rent, maintaining / buying servers, electricity, cooling, hiring excelled employees and keeping them up to date. For most companies, this would be a big overhead dropped out.

Agile

Any cloud service provider has to be agile and if not then, you are not in cloud. Sometimes, requirement hits you on the head with no intimation and the only way you can handle is having everything in place. But why would one have to keep everything prepared for the worst time which might or not happen. Keeping the cost in mind most the companies never prepare for it and when it hits, it hits for bad. With cloud you always have the option of changing your requirement on the fly without any affecting delays.

Reliability

Reliability is something what you can take for granted with machines. Imagine your whole data center goes center due to a network outage of a bad virus hit and you have no 911 in place. Depending on the size of your business and the down time your loss will be in millions and even in billions. Most companies have to sign up with different vendors across globe for data backup, mirroring or emergency setup and you can imagine the cost involved in replicating your datacenter. The reliability has to come as a bundled package with cloud service. Azure ensures that your application or service or data is 99.9% up and running.
Remember it is the application which is guaranteed in Azure where as most the competitors provide the guarantee only to the server or the VM alone in Azure.

Scalability

Yet another feature that most the business on the web need as of today. Imagine you are running a NFS streaming site and the races happen only few times in a year and your major business will be on those days and if your bandwidth outs one single day; your loss will be a bigger percentage on annual growth. Say on an ordinary day your site will have a hit of few hundreds and during the days when races are on it will raise millions. Now without cloud you will need maintain the hardware and infrastructure which will happily allow the maximum traffic through out the year which will lie unused for most the year. However, with cloud all you need is to pay as per the usage and with the cloud you will have virtually infinite limit of resources that your application can make use of.

Availability

Since the  cloud vendors have to maintain your resources in a globally available location and with almost no down time, you will be released with the overhead of maintaining your resources available 24/7.
Share:

Saturday, February 4, 2017

இண்டர்நெட்டில் விபரங்களை அழிக்க வேண்டுமா?

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம். இண்டர்நெட் நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனை ஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது.



ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட் நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதே அளவுக்கு அதனால் நமக்கு ஒருசில ஆபத்தும் உள்ளது. ஹேக்கர்களின் கைவரிசையால் நமது பொருட்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு நம்முடைய பர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

என்னதான் ஆண்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும், பாஸ்வேர்டுகளை சிக்கலாக வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில் உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கிவ்டுகின்றனர். இந்நிலையில் தற்போது நமக்கே தெரியாத ஒருசில இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்முடைய தகவல்களை அழிக்க, தற்போது ஒரு சிறந்த வழி கிடைத்துள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள் இதற்கென ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும்.

அவற்றில் தேவையில்லாத இணையதளங்களில் உங்கள் தகவல் இருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட் செய்துவிடலாம். இதற்கு ஒருசில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அவை என்னவென்று தற்போது பார்ப்போம்.

இந்த இணையதளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதும். உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் லாக்-இன் செய்த பின்னர் Deseat.me இணையதளத்தை ஒப்பன் செய்யுங்கள்.

அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலி முதல் இணையதளங்கள் வரை திரையில் வரும். அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காத அல்லது அறவே உபயோகிக்காத இணையதளங்கள் இருந்தால் அதை உடனே டெலிட் செய்துவிடுங்கள். அந்த இணையதளத்தில் உங்களை பற்றிய தகவல்கள் மறைந்துவிடும்.

தற்போதைக்கு அனைத்து விதமான இணையதளங்களுக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லை என்றாலும் ஃபேஸ்புக் போன்ற பெரிய இணையதளங்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

ஆயினும் வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்ன சின்ன இணையதளங்களில் உள்ள நம்முடைய விபரங்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாக செயல்பட வைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்

வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி
Share:

IKnowWhatYouDownload

உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload

சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com 



ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண முடியுமாம். இதன் மூலம் நீங்கள் பிட் டோரன்ட்டை பயன்படுத்தி டவுன்லோட் செய்யும் தரவுகளை எளிதில் பெற முடியும். என்ன டவுன்லோட் செய்தீர்கள் என்பதை அறிய முடியும். உங்கள் ஐ.பி அட்ரஸை இந்த தளத்தை திறந்தாலே எடுத்துவிடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

டவுன்லோட் ஹிஸ்டரியை எப்படி பெறுவது?

உங்களுக்கு தேவைப்படுபவரின் IP Address தெரிந்தால் போதும் அவர் பிட் டோரன்ட்டில் டவுன்லோட் செய்த அனைத்து விவரங்களையும் பெற முடியும். உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் எதாவது ஒரு படத்தை வேலைக்கு நடுவே டவுன்லோட் செய்கிறார் என்றால் எத்தனை மணிக்கு எந்த படத்தை எத்தனை மெமரியில் டவுன்லோட் செய்துள்ளார் என்பதை காட்டிவிடும்.

அவரது IP Address தெரியவில்லை என்றால் எதாவது ஒரு பாடல் அல்லது செய்தியின் லின்க்கை எடுங்கள். அதனை இந்த தளத்தில் உள்ள ட்ராக் IP Address பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்யுங்கள். அது ஒரு சுருக்கப்பட்ட லின்க்கை தரும் அந்த லின்க்கை உங்கள் நண்பருக்கு அனுப்பி வைய்யுங்கள். அதன் மூலம் உங்கள் நண்பரது IP Address கிடைத்துவிடும்.

கிடைத்த IP Address மூலமாக பிட் டோரன்ட்டில் உங்கள் நண்பர் டவுன்லோட் செய்த படம், பாடல், வீடியோ என அனைத்து தகவலும் கிடைத்துவிடும். பிட் டோரன்ட் உங்கள் IP Address ஐ உங்களது ஒவ்வொரு டவுன்லோடுடன் மேட்ச் செய்து வைத்திருக்கும். அதன் மூலம் ஈஸியாக உங்களது டவுன்லோட் விவரங்களை அள்ளித்தருகிறது. 



என்ன ஆபத்து?

1. இந்த தளத்தில் இருந்து தரப்படும் லின்க் உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரியை தருகிறது என்றாலும் இவர்களும் ஹேக்கர்களே. மற்ற ஹேக்கர்களும் உங்கள் IP Address-க்குள் நுழைந்து உங்களது பர்சனல் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. 

2. டோரன்ட் டவுன்லோட் செய்திருந்தால் மட்டுமே உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரி தெரியும். ஆனால் உங்களது IP Address ஐ எந்த ரிஸ்க்கும் இல்லாமல் இந்த தளம் கொடுத்துவிடுகிறது. இதுவும் சற்று ஆபத்தானது தான்.

3. சிலரது வங்கி கணக்கு, பர்சனல் வீடியோக்கள் கூட இதன் மூலம் இழக்க வாய்ப்புள்ளது. 

தடுப்பது எப்படி?

நம்பகத்தன்மையான நபரிடம் இருந்து வந்தாலும் அவசரப்பட்டு க்ளிக் செய்யாதீர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி பெறுங்கள். ஒற்றை க்ளிக்கில் உங்கள் தகவல்களை இழக்காதீர்கள். டோரன்ட் போன்ற தளங்கள் மூலம் டவுன்லோட் செய்வதை தவிருங்கள். உங்கள் பர்சனல் பர்சனலாகவே இருக்கும்.

iknowwhatyoudownload.com இந்த தளம் ஒரு ஸ்பை தளமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டூல் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் டவுன்லோட் ஹிஸ்டரியை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பார்த்து உஷாரா இருங்க பாஸ்! VPN போன்றவற்றின் மூலம், இதில் இருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u