இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம். இண்டர்நெட் நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனை ஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது.
ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட் நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதே அளவுக்கு அதனால் நமக்கு ஒருசில ஆபத்தும் உள்ளது. ஹேக்கர்களின் கைவரிசையால் நமது பொருட்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு நம்முடைய பர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
என்னதான் ஆண்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும், பாஸ்வேர்டுகளை சிக்கலாக வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில் உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கிவ்டுகின்றனர். இந்நிலையில் தற்போது நமக்கே தெரியாத ஒருசில இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்முடைய தகவல்களை அழிக்க, தற்போது ஒரு சிறந்த வழி கிடைத்துள்ளது.
சுவீடன் நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள் இதற்கென ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும்.
அவற்றில் தேவையில்லாத இணையதளங்களில் உங்கள் தகவல் இருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட் செய்துவிடலாம். இதற்கு ஒருசில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அவை என்னவென்று தற்போது பார்ப்போம்.
இந்த இணையதளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதும். உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் லாக்-இன் செய்த பின்னர் Deseat.me இணையதளத்தை ஒப்பன் செய்யுங்கள்.
அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலி முதல் இணையதளங்கள் வரை திரையில் வரும். அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காத அல்லது அறவே உபயோகிக்காத இணையதளங்கள் இருந்தால் அதை உடனே டெலிட் செய்துவிடுங்கள். அந்த இணையதளத்தில் உங்களை பற்றிய தகவல்கள் மறைந்துவிடும்.
தற்போதைக்கு அனைத்து விதமான இணையதளங்களுக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லை என்றாலும் ஃபேஸ்புக் போன்ற பெரிய இணையதளங்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.
ஆயினும் வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்ன சின்ன இணையதளங்களில் உள்ள நம்முடைய விபரங்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாக செயல்பட வைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.