Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Friday, December 9, 2011

நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?

அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் உங்களின் நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த மின் அஞ்சலை தயார் செய்து அனுப்பிவிடலாம். 


http://emailfuture.com/  இணையதளத்திற்கு சென்று அங்கே உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டிய விடயத்தை பதிந்துவிட்டு அந்த மின் அஞ்சல் அவருக்கு எந்த வருடம், எந்த திகதியில், எத்தனை மணிக்கு என்பதனை தெரிவு செய்துவிட்டு அனுப்பிவிடுங்கள்.

உங்களின் மின் அஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட திகதியில்தான் உங்களின் நண்பரை சென்றடையும்.


Share:

Useful Online Books for here...

Share:

உங்கள் ஈமெயில்கள் படிக்கப்பட்டதா? எங்கிருந்து படிக்கப்பட்டது?


சில நேரங்களில் முக்கியமான ஈமெயில்களை அனுப்பிவிட்டு நீங்கள் பதிலுக்காக காத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பிய ஈமெயில்களுக்கு பதில் ஏதும் வராமல் இருக்கலாம், அவருக்கு மீண்டும் ஈமெயில் மூலம் நினைவுறுத்தலாமா? அவர் அந்த மெயிலைப் படித்திருப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இது போன்ற நேரங்களில் இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இது போன்று மெயில் எங்கிருந்து படிக்கப்பட்டது என்று அறியவேண்டிய சூழ்நிலை வேறு காரணங்களுக்கு ஆகவும் ஏற்படலாம். இவற்றை தெரிந்து கொள்வதற்காகவே இரண்டு தளங்கள் செயல்படுகின்றன. முதலில் www.spypig.com தளம். இத்தளத்தில் நம்முடைய ஈமெயில் முகவரி மற்றும் மெசேஜ் டைட்டில் ஆகியவற்றை உள்ளிட்டு நமக்கு விருப்பமான ஒரு image ஐ select செய்து கொள்ளவேண்டும். இந்த image நம்முடைய ஈமெயிலுடன் இணைத்து அனுப்பப்படும். ஆனால் image தெரியாதவாறு blank ஆன image ஐயும் அனுப்பலாம். இங்கு எத்தனை முறை படிக்கப்படும் வரை தெரியவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் click to activate my spypig என்பதில் கிளிக் செய்து activate செய்துகொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் செலக்ட் செய்த image ஐ copy செய்து 60நொடிகளுக்குள் அனுப்பவேண்டிய ஈமெயிலில் paste செய்து send கொடுத்துவிடுங்கள். இனி நீங்கள் அனுப்பிய இந்த மெயிலை open செய்யும் போதெல்லாம் உங்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் எங்கிருந்து படிக்கப்பட்டது? எப்போது படிக்கப்பட்டது? அவர் பயன்படுத்தும் browser, அவருடைய service provider உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம். இச்சேவை முழுவதும் இலவசம் registrationனும் தேவையில்லை.
Share:

கெட்டுப்போன "சிடி'யிலிருந்து டேட்டா பெற முடியுமா?


ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது இதற்கு இதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று உள்ளது. அந்த புரோகிராம் பெயர் CDRoller. இந்த புரோகிராம், வழக்கமான விண்டோஸ் டூல்கள் மூலம், சிடி ட்ரைவினால் படிக்க இயலாத, சிடி/டிவிடி/புளுரே டிஸ்க் ஆகிய டிஸ்க்குகளிலிருந்து டேட்டாவினைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சிடிக்களிடம் இது பலனளிக்கிறது. இந்த புரோகிராமினாலும் படிக்க இயலவில்லை என்றால், டேட்டாவினை, அத்தகைய சிடிக்களிடமிருந்து பெறுவது கஷ்டம்தான்.

இந்த புரோகிராமினை http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். சி.டி. ரோலரின் பதிப்பு 8.81 தற்சமயம் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து, படிக்க இயலாத சிடிக்களிடமிருந்து டேட்டா பெற முயற்சிக்கலாம். இதில் ஒரு யு.டி.எப். ரீடர் (UDF Reader) தரப்பட்டுள்ளது. இது பல முறை எழுதப்பட்ட (Multi Session CDs) சிடிக்களிலும் சிறப்பாக இயங்குகிறது. சிடிக்களிலிருந்து கவனக் குறைவாக அழிக்கப்பட்ட பைல்களையும் மீட்டுத் தருகிறது. சாதாரணமாகப் படிக்க இயலாத பைல்களை, ட்ராக் அண்ட் ட்ராப் முறையில் மீட்டுத் தருகிறது. இந்த புரோகிராமிலேயே டிவிடி –வீடியோ ஸ்பிளிட்டர் என்னும் வசதி தரப்படுகிறது. இதன் மூலம் டிவிடி வீடியோக்களைப் பிரித்து அமைக்கலாம். மேலும் சிடி/டிவிடி/புளு ரே டிஸ்க் ஆகியவற்றில் டேட்டா எழுதும் பர்னர் புரோகிராமும் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பிளாஷ் ட்ரைவ்களில் இருந்து காணாமல் போன பைல்களையும் மீட்கலாம். இந்த பதிப்பில் பல ட்ரேக்குகளை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.
Share:

பெண்ணின் கண்ணீருக்கு சக்தி இருக்கிறதா?


கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்பார்கள். பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மோசமான ஆணும் கூட இளகி விடுவதுண்டு.

நாம் நினைக்குமளவு பெண்ணின் கண்ணீர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? இது குறித்து இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு நடத்தியது. 


பெண்களின் கண்ணீரில் உள்ள இரசாயனப் பொருட்களினால் ஆண்களின் டெஸ் டொஸ் டெரோன் எனும் ஹோர்மோன் குறையுமாம். இதனால் உடல் ரீதியான எழுச்சி குறையுமாம்.

கண்ணீரின் மூலமான தொடர்பாடல் குறித்தும் இந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெங்காயம் உரிப்பதாலோ வேறு காரணங்களாலோ வரும் கண்ணீரைவிட கவலையின் காரணமாக வரும் கண்ணீரில் விஞ்ஞான ரீதியான தொடர்பாடல் இடம்பெறுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களின் டெஸ்டொய்டெரோன் ஹோர்மோனுக்கும் வன்முறைக்குமிடையே தொடர்பு இருக்கிறது. பெண் ஒருவர் அழுவதன் மூலம் ஆணின் வன்முறைக் குணம் அதிகரிக்கிறதாம்.

இந்த ஆய்விற்காக பெண்கள் குழுவொன்றுக்கு 1979 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ‘த செம்ப்’ எனும் அமெரிக்க திரைப்படம் காண்பிக்கப்பட்டது. 

குத்துச் சண்டை வீரரான தனது தந்தையின் மரணத்தை தாங்காது சிறுவன் ஒருவன் தேம்பித் தேம்பி அளும் சோகமான காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். இதனை பார்த்த பெண்கள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தனர். 

அந்தக் கண்ணீர்த் துளிகளை திரட்டிய விஞ்ஞானிகள் ஆண்களுக்கு அதன் வேதனையை அன்றி மணத்தை உணர வைத்தனர். இதற்காக சேலைன் நீர் கண்ணீரில் கலக்கப்பட்டது. 

சேலைன் மணத்தை விட கண்ணீரின் மணத்தை உணர்ந்த ஆண்கள், பெண்கள் குறித்து குறைவான ஈர்ப்பையே கொண்டனர். இதனூடாக கண்ணீர் விடும் பெண்களால் குறித்த ஆண்களுக்கு நல்லபிப்ராயம் இருக்காதாம். இனிமேல் பெண்களின் கண்ணீருக்கு பெறுமதி இருக்காதா?
Share:

அதிகமான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அறிய வாய்ப்பு...

2 GB அளவு வரையான file களை மற்றவர்களுடன் 2 வாரம் வரைக்கும் பகிர உதவும் இலவச தளம். அதன் பின்னர் அழிபட்டுவிடும்.


Share:

Types of Files


txt: நோட்பேடில் (note pad) நாம் டைப் செய்து சேமிக்கும் ஃபைல்கள் டெக்ஸ்ட் ஃபார்மெட்டுகளாக சேமிக்கப்படும். அனைத்து விண்டோஸ் இயக்கத்தளங்களிலும் இந்த ஃபைல்களை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

doc : இவ்வகையான ஃபைல் ஃபார்மெட்டுகள் வேர்டுபேடு, எம்எஸ்வேர்டு போன்ற சாஃப்ட்வேரில் திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதை டாக்குமென்ட் (document) பார்மெட் என்று அழைக்கிறோம். 

html: இணையப் பக்கங்களை அழகுற வடிவமைக்க இந்த வகையான ஃபைல் ஃபார்மெட் பயன்படுகிறது. நோட்பேடில் இதற்குரிய ப்ரோகிராமை டைப் செய்து சேமிக்கும் போது ஃபைலின் பெயர் மற்றும் .html என்று சேமிக்க வேண்டும். 


avi: இது வீடியோ ஃபைலை குறிக்கிறது. இவ்வகையான ஃபைல் ஃபார்மெட்டுகளை பயன்படுத்த எவ்வகையான சாஃப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. விண்டோஸில் உள்ள மீடியா ப்ளேயர் வழியாகவே இதை இயக்கிக் கொள்ளலாம். 

mpeg: இது சுருக்கப்பட்ட மூவி ஃபைலாகும். ஏவிஐ ஃபைலை விட இதன் கொள்ளளவு குறைவாக இருக்கும். இந்த ஃபைல் ஃபார்மெட்டை எந்தவொரு சாஃப்ட்வேரிலிருந்தும் சேமித்து பெற முடியாது. 

psd: போட்டோஷாப் ஃபைல் ஃபார்மெட்டுகளே பிஎஸ்டி ஃபைல் என்றழைக்கப்படுகின்றன. இதற்கு போட்டோஷாப் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த ஃபைலை திறக்க முடியாது. 

gif: பெரும்பாலும் இணையதளப் பணிகளில் இந்த ஃபார்மெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அனிமேஷன் மற்றும் ஃபோட்டோ ஃபார்மெட்டாக இவை இருக்கும். 

jpeg: இணையதளங்களில் பயன்படுத்தப்படும் படங்கள் ஜேபிஜே ஃபார்மெட் படங்களே. 

cdr: துல்லியமான அழகிய ஓவியங்கள் வரைந்து அதற்கு வண்ணங்களை கொடுத்து சேமிக்கப்படும் ஃபைல்கள் ஸ்ரீக்ழ் என்றழைக்கப்படுகிறது. இதன் விரிவாக்கம் coraldraw. 

pmd: பத்திரிகை பணிகளையும், விசிடிங் கார்டு போன்றவைகளை செய்ய பேஜ்மேக்கர் பயன்படுகிறது. இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் தான் இந்த ஃபைலை பயன்படுத்த முடியும். 

tiff: உயரிய தரத்திலான ஃபோட்டோக்களை கொண்டு பிரிண்ட் எடுப்பதற்கு இந்த ஃபைல் ஃபார்மெட் பயன்படுகிறது. கோரல்ட்ரா மற்றும் ஃபோட்டோஷாப் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்திருந்தால் இதை பயன்படுத்த முடியும். 

bmp: விண்டோஸ் சார்ந்த அனைத்து இயக்கத்தளங்களிலும் இந்த ஃபார்மெட் உறுதுணை செய்யும். மேக்கின்டோஷ் போன்ற இயக்கத்தளங்களில் இந்த ஃபைல் ஃபார்மெட் உறுதுணை செய்யாது. 
Share:

மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு இணையாக ஒரு புதிய மென்பொருள்


நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.

இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் "King Soft Office Suite 2012"  இது ஒரு இலவச மென்பொருள். 

இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவைகளை உருவாக்க முடியும். 

அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும். 

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம். 

இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
Share:

Use Multiple Mail Accounts in a Single Browser


நாம் பொதுவாக ஒரு Browser இல் ஒருசமயத்தில் ஒரு கூகுள் கணக்கினையே கையாள்வதுண்டு.

இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்த பின்பே மற்றைய கணக்கை திறப்பதுண்டு. அல்லது வேறொரு Browser ஐத் திறந்து அதனைப் பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இவ்வாறு இல்லாமல் ஒரு Browser இலேயே ஒரே சமயத்தில் எவ்வாறு பல கூகிள் கணக்குகளை கையாளலாம். அதாவது இதனை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம். 

நீங்கள் ஒரு கணக்கை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னொரு கணக்கையும் கையாள வேண்டியேற்படின் அதற்காக " Shift + Ctrl + N " என்பதைக் கொடுங்கள். இப்போ Browser இன் புதிய விண்டோ ஒன்று திறக்கும். 
உங்கள் ஜிமெயில் கணக்கின் Sign out செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள். இங்கே "Switch Account" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் பகுதியில் " Sign in to Another Account " என்று காணப்படும். இதனை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் புதிய Tap இல் உங்கள் மற்றைய கணக்கினைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

இதில் Browser இன் ஒரு விண்டோவிலேயே பல Tap களில் வெவ்வேறு கூகுள் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share:

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு


நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.

அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும். 

இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும். 

இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். 

ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். 

மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u