கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்பார்கள். பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மோசமான ஆணும் கூட இளகி விடுவதுண்டு.
நாம் நினைக்குமளவு பெண்ணின் கண்ணீர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? இது குறித்து இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு நடத்தியது.
நாம் நினைக்குமளவு பெண்ணின் கண்ணீர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? இது குறித்து இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு நடத்தியது.
பெண்களின் கண்ணீரில் உள்ள இரசாயனப் பொருட்களினால் ஆண்களின் டெஸ் டொஸ் டெரோன் எனும் ஹோர்மோன் குறையுமாம். இதனால் உடல் ரீதியான எழுச்சி குறையுமாம்.
கண்ணீரின் மூலமான தொடர்பாடல் குறித்தும் இந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெங்காயம் உரிப்பதாலோ வேறு காரணங்களாலோ வரும் கண்ணீரைவிட கவலையின் காரணமாக வரும் கண்ணீரில் விஞ்ஞான ரீதியான தொடர்பாடல் இடம்பெறுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் டெஸ்டொய்டெரோன் ஹோர்மோனுக்கும் வன்முறைக்குமிடையே தொடர்பு இருக்கிறது. பெண் ஒருவர் அழுவதன் மூலம் ஆணின் வன்முறைக் குணம் அதிகரிக்கிறதாம்.
இந்த ஆய்விற்காக பெண்கள் குழுவொன்றுக்கு 1979 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ‘த செம்ப்’ எனும் அமெரிக்க திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
குத்துச் சண்டை வீரரான தனது தந்தையின் மரணத்தை தாங்காது சிறுவன் ஒருவன் தேம்பித் தேம்பி அளும் சோகமான காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். இதனை பார்த்த பெண்கள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தனர்.
அந்தக் கண்ணீர்த் துளிகளை திரட்டிய விஞ்ஞானிகள் ஆண்களுக்கு அதன் வேதனையை அன்றி மணத்தை உணர வைத்தனர். இதற்காக சேலைன் நீர் கண்ணீரில் கலக்கப்பட்டது.
சேலைன் மணத்தை விட கண்ணீரின் மணத்தை உணர்ந்த ஆண்கள், பெண்கள் குறித்து குறைவான ஈர்ப்பையே கொண்டனர். இதனூடாக கண்ணீர் விடும் பெண்களால் குறித்த ஆண்களுக்கு நல்லபிப்ராயம் இருக்காதாம். இனிமேல் பெண்களின் கண்ணீருக்கு பெறுமதி இருக்காதா?