
உலகின் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்களால் பேசப்படும் ஆங்கிலம் அமெரிக்கா , பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து , கனடா (பகுதி) முதன்மை மொழியாகவும் அயர்லாந்து , தெனாபிரிக்கா நாடுகளின் பெருமளவில் பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
இதுவரை ஆக்ஸ்போஃட் அகராதி (Oxford English Dictionary) 500,000சொற்களை உள்ளடக்கியுள்ள போதிலும் பல புதிய சொற்கள் தினமும் உருவாகின்றன.
உலக தபால் தொலைத் தொடர்பு மூன்றில் ஒருபகுதியிலும் மற்றய தகவல்கள் 80%கணனியிலும் (பலவடிவில்) உள்ளடக்குகின்றது.
உலகில் தமது தாய்மொழி தவிர்ந்த 2 ம் மொழியாக 700 மில்லியன் மேலான மக்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர்.
தினம் வெளியாகும் சஞ்சிகைகள் மற்றும் ஊடகங்கள் (CBS, NBC, ABC, BBC and CBC) ஆங்கிலமொழியில் வெளியிடும் தகவல்கள் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களை சென்றடைகின்றது.
ஐ.நா வில் அங்கம்வகிக்கும் 163 நாடுகளில் ஆங்கிலம் (45), பிரஞ் (26 ), ஸ்பனிஷ் (21), ஆரபிக் (17) இவற்றுடன் மீதமாகவுள்ளவை தமது தாய் மொழியையும் அரச கருமத்தில் உபயோகிக்கின்றன.
ஆங்கிலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இனையத்தின் தாய்மொழியாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விடையத்தில் வல்லமையுள்ள மொழியாகவும் இருந்துவருகின்றது.
ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.
ஆங்கில அகர எழுத்துக்களில் மிகவும் அதிகமாக பாவிக்கப் படுவது - E , மிகவும் குறைவாக பாவிக்கப்படுவது - Q ஆகும்.
ஆங்கில மொழியில் மிகவும் சிறியதும் முழுமையானதுமான வசனம் " I am." என்பதே.
இரு முறை " i " எனும் எழுத்து அடுத்துவரும் ஒரே ஒரு சொல் " skiing " மட்டுமே.
" mt " எனும் சொல் மட்டுமே " dreamt " இல் முடிவடையும் சொல் என்பதும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும்.
ஆங்கிலமொழியில Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis (Silicosis) எனும் சொல் மிக நீளமானது. அதிகார பூர்வமாக ஏற்க்கப்பட்ட இந்த சொல்லில் 45 எழுத்துக்கள் உண்டு. இதை விடவும் பலநூறு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆனால் அகராதிகளில் சேர்க்கப்படாத சொல்கள் உள்ளன