கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேகத்திற்கு தகுந்தாற்போல் காரில் கியர் மாற்ற தெரிந்துகொண்டால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, கார் ஸ்மூத்தாக செல்லும். இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும்.
மேனுவல் கியர் மாடல் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார் மாடலுக்கான வழிகாட்டு முறைகள் அடுத்தடுத்த கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் கியர்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும்.
இரண்டாவது கியர்
இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள்.வளைவில் திருப்பும்போது...
அதிக வளைவு கொண்ட சாலையில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம்.
எளிய வழி
ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது.டாப் கியர் எப்போது?
கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும்.
முதல் கியர் பயன்பாடு
தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும்.
ரிவர்ஸ் கியர்
ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும். பின்புறம் வாகனம் அல்லது பொருட்கள் இருப்பது தெரிந்தால் மிக மெதுவாக ஆக்சிலரேஷன் செய்து பின்புறம் செல்லுங்கள்.
இனிய பயணம்
சரியான வேகத்தில் கியரை மாற்ற பழகிக்கொண்டால், கார் ஓட்டுவதில் நீங்கள் பாதி எக்ஸ்பர்ட் என்பது மட்டுமல்ல, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.
ஆட்டோமேட்டிக் கார்களை சிறப்பாக கையாள்வதன் மூலமாக, இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். ஆட்டோமேட்டிக் கார்களை பலர் விரும்பி வாங்கினாலும் அதனை கையாள்வதில் அவர்கள் செய்யும் சிறு தவறுகளால் ரிப்பேர் செலவுகளுக்காக பெரும் விலையை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கார்களை இயக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.
கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலர் மேனுவல் கியர்பாக்ஸ் கார் போன்று, டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் மோடிற்கு மாற்றுவிடுகின்றனர். இது மிகவும் தவறு. இதுபோன்று மாற்றும்போது கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷனின் சுழல் பாகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் லைனிங் சீக்கிரமே தேய்ந்துபோகும்.
இந்த லைனிங் என்பது நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்றதாக உறுதியானதாக இருக்கும். ஆனால், திடீரென கியரை மாற்றும்போது அவை தாக்குப்பிடிக்காமல் தெறித்து போகவும் அல்லது உடைந்துபோகவும் வாய்ப்புண்டு. எனவே, காரை நிறுத்துவதற்கு பிரேக்கை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.
தற்போது வரும் பெரும்பாலான கார்கள் சரிவான சாலைகளில் இறங்கும்போது தானாகவே எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. எனவே, எரிபொருள் சேமிப்பு பற்றி கவலை கொள்ள வேண்டாம். எனவே, காரை நியூட்ரலில் வைக்காமல் சரியான கியரில் வைத்து இயக்குவது சாலச் சிறந்தது.
சரிவான சாலைகளில் எஞ்சினின் துணை தேவையில்லாமல் கார் வேகமாக இறங்கும். அதுபோன்ற சமயங்களில் சிலர் எரிபொருள் சேமிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரை நியூட்ரல் கியருக்கு மாற்றி இயக்குகின்றனர். இது மகா தவறு. இதுபோன்று இயக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. காரை நியூட்ரலில் வைத்து ஓட்டுவதை தவிர்க்கவும்.ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மோடு நியூட்ரலில் இருக்கும்போது ஆக்சிலரேட்டரை கொடுத்து எஞ்சினை ரெவ் செய்ய வேண்டாம். இதுபோன்று செய்தால், ஆட்டோமேட்டிக் கார்களின் க்ளட்ச் பாகங்கள் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு காரணமாக க்ளட்ச் ஸ்லிப் ஆகும் என்பதுடன், அதற்குண்டான ரிப்பேர் பில்லும் நம் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும். தொடர் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது நியூட்ரல் மோடிற்கு மாற்றினால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவிர்க்க வேண்டிய செயல்தான். ஏனெனில், டிரைவ் மோடில் வைத்து கார் நிற்கும்போது எஞ்சின் இயக்கம் தானாக குறைந்துவிடும் வகையில் ஆட்டோமேட்டிக் கார்கள் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. நியூட்ரல் மோடில் எஞ்சின் ஐட்லிங் சற்றே கூட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதால் எரிபொருள் இழப்பு சற்று அதிகம்.
மேலும், கியர் மோடுகளை மாற்றும்போது ஏற்படும் எரிபொருள் இழப்பைவிட, டிரைவ் மோடில் வைத்தே நிறுத்துவதால் எரிபொருள் இழப்பு குறைவாகவே இருக்கும் என்பதுடன், நியூட்ரலில் இருக்கும்போது இம்பெல்லர் மூலமாக ஐட்லிங் கூட்டப்படுவதால், க்ளட்ச் மற்றும் எஞ்சினுக்கு ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும். நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால், எஞ்சினை ஆஃப் செய்துவிடுவது பலன் தரும்.
கார் நகர்ந்து கொண்டிருக்கும்போது தப்பி தவறி கூட பார்க் மோடிற்கு மாற்ற வேண்டாம். ஹேண்ட்பிரேக் போல செயல்படும் Park Pawl இதுபோன்ற செயலால் சேதமடைந்துவிடும். காரை நிறுத்தியவுடன், கார் நகராமல் பிடித்து வைத்திருக்கும் இந்த பற்சக்கர அமைப்பு, கார் நகரும்போது லாக் செய்யப்பட்டால், அது முழுமையாக சேதமடைந்து பெரும் செலவில் கொண்டுவந்துவிட்டு விடும்.
ஆட்டோமேட்டிக் கார்களை இயக்குவது மிக சுலபமாக இருக்கும். அதேபோன்று, நாம் செய்யும் சிறு தவறுகளால், செலவும் அதிகம் வைக்கும் அபாயம் உள்ளது. பக்குவமாக கையாளும்பட்சத்தில், அது நீண்ட கால பயன்பாட்டிற்கு மிக சிறந்ததாக இருக்கும்.
முழுமையான ஆட்டோமேட்டிக் கார்களை போன்று ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களின் தொழில்நுட்பம் இல்லை. சாதாரண மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில், க்ளட்ச் இயக்கம் மட்டுமே தானியங்கி முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, ஆக்சிலரேட்டரை சீராக கொடுக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால், கியர் மாறும்போது ஏற்படும் 'ஜெர்க்' ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்குவதற்கு ஏதுவாக, இப்போது வரும் நவீன கார்களில், ஆக்சிலரேட்டரை கொடுக்காமலேயே கார் நகர்வதற்கான Creep function உள்ளது. மேனுவல் கார்களில் இது க்ளட்ச் கட்டுப்பாட்டில் இயங்கும். ஏஎம்டி கார்களில் பிரேக் பெடலை சற்று ரீலிஸ் செய்தாலே கார் முன்னோக்கி நகரும். மெதுவாக நகர்த்த ஆக்சிலரேட்டர் கொடுக்க தேவையில்லை.
ஏஎம்டி கார்களில் ஓவர்டேக் செய்யும்போது மிக கவனமாக இருப்பது அவசியம். மேனுவல் கார் போன்று கியரை சட்டென குறைத்து காரின் வேகத்தை அதிகரித்து ஓவர்டேக் செய்ய முடியாது. எனவே, முன்னால் செல்லும் வாகனம் மற்றும் காரின் வேகத்தையும் ஒப்பிட்டு ஓவர்டேக் செய்வது அவசியம். மிகவும் விழிப்பாக ஓவர்டேக் செய்ய வேண்டியது அவசியம்.
மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் அவசர சமயத்தில் கியரை தடாலாடியாக குறைத்து எஞ்சின் பிரேக்கிங் செய்யும் வாய்ப்புள்ளது. ஆனால், காரின் வேகத்தை பொறுத்து கவனமாக செய்ய வேண்டும். இந்த வசதி ஏஎம்டி கார்களில் இல்லை. எனவே, பிரேக்கை நம்பி மட்டுமே ஓட்ட வேண்டும்.
மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் அவசர சமயத்தில் கியரை தடாலாடியாக குறைத்து எஞ்சின் பிரேக்கிங் செய்யும் வாய்ப்புள்ளது. ஆனால், காரின் வேகத்தை பொறுத்து கவனமாக செய்ய வேண்டும். இந்த வசதி ஏஎம்டி கார்களில் இல்லை. எனவே, பிரேக்கை நம்பி மட்டுமே ஓட்ட வேண்டும்.