யாரும் அறிந்திராத கூகுள் தந்திரங்கள்.!!
துவங்கப்பட்டதில் இருந்து இன்று வரை உலகின் தலைசிறந்த தேடு பொறி நிறுவனம் இருப்பது கூகுள். இண்டர்நெட் தேடலில் முதலிடத்தில் இருப்பதோடு பல்வேறு சேவைகளையும் வழங்கி வரும் கூகுள் நிறுவனம் சார்ந்து யாரும் அறிந்திராத சில பொழுதுபோக்கு தந்திரங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
பூவா தலையா
கூகுள் மூலம் பூவா தலையா போட முடியும் என உங்களுக்கு தெரியுமா. கூகுள் தேடலில் 'Flip a Coin' என டைப் செய்தால் பூவா தலையா போட முடியும்.
தாயம்
கூகுளில் 'Roll A Dice' என டைப் செய்தால் தாயம் விளையாடலாம். ஒவ்வொரு முறை க்ளிக் செய்யும் போதும் வெவ்வேறு எண்கள் திரையில் காண முடியும்.
வளைந்த பதில்கள்
கூகுள் 'Askew' டைப் செய்தால் தேடல் விவரங்கள் ஒரு புறமாக சரிந்திருப்பதை பார்க்கலாம்.
செர்க் ரஷ்
இது சிலருக்கு தெரிந்திருக்கலாம், கூகுள் தேடலில் 'Zerg Rush' என டைப் செய்தால் பதில் தானாக இடிந்து விழுவதை காணலாம்.
அடாரி பிரேக்அவுட்
கூகுள் 'Atari Breakout' என டைப் செய்து இந்த பழைய விளையாட்டை கூகுளில் விளையாடலாம்.
கூகுள் பேக்மேன்
கூகுளில் 'Google Pacman' என டைப் செய்து பேக்மேன் விளையாட்டை விளையாடலாம்.
கூகுள் கிராவிட்டி
கூகுளில் 'Google Gravity' என டைப் I'm Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் கூகுள் இடிந்து கீழே விழுவதை திரையில் பார்க்க முடியும்.
பேரல் ரோல்
கூகுளில் 'Do a barrel roll' என டைப் செய்தால் கூகுள் தேடல் ஒரு பக்கமாக சாய்வதை பார்க்கலாம்.
கூகுள் ஆர்பிட்
கூகுளில் 'Google Orbit' என டைப் செய்து I'm Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் தேடல் முழுவதும் சுற்ற ஆரம்பிக்கும். மவுஸ் பாயின்டருக்கு ஏற்றார் போல் அதுவும் சுற்றும்.
டைனோசர் கேம்
சில சமயங்களில் இண்டர்நெட் வேலை செய்யாவிட்டால் டைனேசர் கேம் விளையாடலாம். இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.