'கேப்ஸ் லாக்', 'நம்லாக்' இயக்குகையில் டாஸ்க்பாரில் அறிவிப்பு
தரவுகளை உள்ளீடு செய்திடும்போதும், டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், நாம் கேப்ஸ் லாக் மற்றும் நம் லாக் கீகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். சில வேளைகளில், தொடர்ச்சியாக சில கேரக்டர்களுக்குப் பயன்படுத்திய பின்னர், இவற்றின் செயல்பாட்டை, கீகளை மீண்டும் அழுத்தி நிறுத்த மறந்துவிடுவோம். சில வேளைகளில், நம்மை அறியாமலேயே, நாம் இந்த கீகளை அழுத்திவிடுவோம்.
அப்போது, நாம் விரும்பாத டேட்டா உள்ளீடு அமைந்திடலாம். குறிப்பாக, பாஸ்வேர்ட்களை அமைக்கையில், அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் மீண்டும் சரியாக பாஸ்வேர்ட் அமைத்துப் பார்த்த பின்னர், வெறுத்துப் போய், கீ போர்டைப் பார்க்கையில், கேப்ஸ்லாக் இயக்கப்பட்டிருப்பதனைப் பார்த்து விரக்தி அடைவோம். வங்கிகளின் கணக்குகளில், மூன்று முறைக்கு மேல் தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், நம் நெட் பேங்கிங் கணக்கு அன்றைக்கு முடக்கப்படும்.
எரிச்சலின் உச்சத்திற்கு நாம் செல்வோம். பல பணிகள் பாதிக்கப்படும். இதற்கு தீர்வு என்ன?
இந்த கீகளை அழுத்துகையில், டாஸ்க் பாரில் இவை இயக்கப்பட்டது அறிவிக்கப்பட்டால், நாம் இந்த குழப்பத்திலிருந்து விடுபட முடியும். அல்லது, இந்த கீகள் அழுத்தப்படுகையில், சிறிய அளவிலான ஒலி எழுப்பப்பட்டால், நாம் உஷார் ஆகி, அக்கீகளை அதன் நிலைப்பாட்டில் இருந்து விடுவிப்போம். அது போல செயல்பாட்டினைத் தரும் செயலிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக, TrayStatus என்னும் சிறிய இலவசமாகக் கிடைக்கும் செயலி, இந்த வகையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை https://www.binaryfortress.com/TrayStatus என்னும் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்திடலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டால், Caps Lock மற்றும் Num Lock கீகளை அழுத்துகையில், திரையில் அவை இயக்கப்பட்டுள்ளன என்று காட்டும். இதே போலச் செயல்படும் மற்ற கீகளின் நிலைகளையும் காட்டும். அத்துடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ் இயக்கம் குறித்தும் காட்டப்ப்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள இணைய தளத்திலிருந்து இதற்கான கோப்பினைத் தரவிறக்கம் செய்து, டபுள் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ள வேண்டும். இதனைப் பதிகையில், விண்டோஸ் இயக்கப்படும்போதே, இதனையும் இயக்க வேண்டுமா என்ற விருப்பக் கேள்வி கேட்கப்படும். அவ்வாறே இயக்கும்படி விருப்பம் தெரிவிக்கலாம்.
பதிந்தவுடனேயே, இந்த செயலியை இயக்கலாம். Caps Lock மற்றும் Num Lock கீகளுக்குத் தனித்தனி ஐகான்கள் சிஸ்டம் ட்ரேயில் காட்டப்படும். இவற்றில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், “TrayStatus Settings” என்பதனைத் தேர்ந்தெடுத்து, மேலும் பல கீகளுக்கு ஐகான்களை சிஸ்டம் ட்ரேயில் அமைக்கலாம். Settings டயலாக் பாக்ஸில், Options டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும். Options பிரிவில், TrayStatus விண்டோஸ் இயக்கத்துடன் இயக்கப்பட வேண்டுமா என்பதனை உறுதி செய்திடலாம்.
கூடுதலான ஐகான்களை சிஸ்டம் ட்ரேயில் இணைக்க, நாம் விரும்பும் ஐகான்கள் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்த வேண்டும். செட்டிங்ஸ் டயலாக் பாக்ஸ் வழியாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாறா நிலையில் உள்ள ஐகான்கள், சிஸ்டம் ட்ரேயில் காட்டப்படும். டிக் அடையாளம் உள்ள ஐகான்கள் எந்த கீகள் சார்பாக உள்ளனவோ, அந்த கீகளின் நிலைப்பாடு குறித்து நாம் சிஸ்டம் ட்ரேயில் தெரிந்து கொள்ளலாம்.
இதில், சில கம்ப்யூட்டர்களில், சிறிய அளவில் பிரச்னையை எதிர்கொள்ளலாம். இந்த ஐகான்கள், சிஸ்டம் ட்ரேயில் காட்டப்படுவதற்குப் பதிலாக, சிஸ்டம் ட்ரேயின் பாப் அப் விண்டோவில் காட்டப்படும். அப்போது, அவற்றை இழுத்து வந்து, சிஸ்டம் ட்ரேயில் விட்டுவிடலாம்.
இவ்வாறு அமைத்த பின்னர், நாம் அமைத்துள்ள அனைத்து ஐகான்களையும் சிஸ்டம் ட்ரேயில் அவற்றின் இயக்கத்தின் போது பார்க்க முடியும். ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினைப் பொறுத்த வரை, அதன் நிலையைப் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவில் டேட்டா படிக்கப்படுகையில், அதன் ஐகானின் இடது பக்கம் பச்சை நிறத்திலும், எழுதப்படுகையில், வலது பக்கம் சிகப்பு நிறத்திலும் காட்டப்படும். மவுஸின் கர்சரை, ஹார்ட் ட்ரைவின் ஐகான் அருகே கொண்டு போனால், ஹார்ட் ட்ரைவின் செயல்பாடு, அதன் எழுதும் வேகம் ஆகியவை சிறிய டூல் டிப்பில் காட்டப்படும்.
இனி, ஷிப்ட், கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளையும், கேப்ஸ் லாக் மற்றும் நம் லாக் கீகளைப்போல டாகிள் கீயாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து அழுத்த வேண்டியதில்லை. பல பைல்களை, ஆப்ஜெக்ட்களைத் தேர்ந்தெடுக்கையில், இந்த செயல்பாடு நமக்கு உதவியாய் இருக்கும்.