ஏன் 32 ஜிபி ப்ளாஷ் ட்ரைவ் (32GB Flash Drive) என அமைக்கிறார்கள். 30, 40 என அமைத்தால் என்ன?
பைனரி என்பதால்:
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் எண்கள் 32, 256, 512, 1024 என இருக்கின்றன. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் அனைவரும் டெசிமல் சிஸ்டம் வழி எண்களைப் பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள். 0 முதல் 9 வரை. இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம். ஆனால், கம்ப்யூட்டர்கள் வேறு வகையில் எண்களைக் கையாள்கின்றன. இரண்டே இரண்டு இலக்கங்கள் தான்; அவை 0 மற்றும் 1. கம்ப்யூட்டர் எதனைச் செயல்படுத்தினாலும், டெக்ஸ்ட், சொல், கடிதம், படங்கள் என எதுவாக இருந்தாலும், அவை இந்த இரண்டு எண்களால் தான் குறிப்பிடப்படுகின்றன.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை 0 என்பது “off” நிலை, 1 என்பது “on” நிலை. இதனைத்தான் பைனரி (binary) எனக் குறிப்பிடுகின்றனர். நீங்கள் புரோகிராமிங் அல்லது கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து தீவிரமாகக் கணினியில் செயல்பட்டால் தான், இது குறித்து அதிகமாக அறிந்து செயல்பட வேண்டியதிருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
டெசிமல் சிஸ்டத்தில், 1x10 = 10, 10x10=100, 100x10= 1000 எனத் தொடர்கிறோம். பைனரியில் 1x2=2, 2x2=4, 4x2=8, 8x2=16, 16x2=32 எனச் செல்ல வேண்டும். கீழே இந்தக் கட்டத்தினைக் கவனியுங்கள். இது 10011 என்ற பைனரி எண் அமைப்பை விவரிக்கிறது.
16(8×2) - 1
8(4×2) - 0
4(2×2) - 0
2(1×2) - 1
1 - 1
ஒரு கட்ட்த்தில் “1” இருந்தால் அது “on” நிலை. அதன் மதிப்பு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி இங்கே 1+2+16 எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆக மொத்தம் 19. பைனரி எண் 10011 மதிப்பு 19. அதாவது 19 என்ற எண் மதிப்பைக் கம்ப்யூட்டருக்குத் தர 10011 என்ற பைனரியைத் தர வேண்டும்.
ஒரு டெசிமல் எண்ணை எடுத்து, அதனைப் பைனரி எண்ணாக மாற்றினால், இது இன்னும் சற்று தெளிவாகப் புரியும். எடுத்துக் காட்டாக 55 என்ற டெசிமல் எண்ணை எடுத்துக் கொள்வோம். பைனரி மதிப்பு எண்களில் (1,2,4,8,16,32,64) எந்த எண் இதனைக் கொள்ளும் மிகப் பெரிய எண் எனக் காண வேண்டும். அது 32. இந்த மதிப்பில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இனி 55லிருந்து இந்த 32 ஐக் கழிக்க நமக்கு 23 கிடைக்கிறது. இதனைக் கொள்ளும் மிகப் பெரிய எண் 16. இதில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இப்படியே ஒவ்வொரு மதிப்பைக் கணக்கிட்டு அதற்கான பைனரி எண்ணில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இப்படியே 0 கிடைக்கும் வரை அமைக்கவும்.கீழ்க்காணும் வகையில் “55ன்” பைனரி அமையும்.
32(16x2) - 1
6(8×2) - 1
8(4×2) - 0
4(2×2) - 1
2(1×2) - 1
1 - 1
அதாவது டெசிமல் எண் 55ன் பைனரி எண் 110111. இப்போது பைனரி குறித்து அறிந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு 32 ஜிபி, 128 ஜிபி என ஏன் இருக்கிறது என்பது புரியும்.