இணையம் சார்ந்த குறிப்புகள்
2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என அழைத்தனர்.
3. Frederick Cohen என்ற மாணவர், வைரஸ் (“virus,”) என்ற சொல்லை முதன் முதலில், கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமிற்குப் பயன்படுத்தினார். இவர் கலிபோர்னியா பொறியியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
'தானாகவே, தன்னைப் பெருக்கிக் கொள்ளும் புரோகிராமிற்கு' இந்த சொல்லை வடிவமைத்துப் பயன்படுத்தினார். தன் வகுப்பு தோழர்கள் அறிந்து கொள்ள வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தயாரித்துக் காட்டினார். பின்னர் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்துடன் விவரித்தார்.”கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களைக் கெடுத்து, அவற்றைப் போலவே நகலினை உண்டாக்கும் புரோகிராம்”.
இவரே, இத்தகைய வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும் தொழில் நுட்ப வழிகளை உருவாக்கிக் காட்டினார். பின்னர், அவரே, 1987 ஆம் ஆண்டு, அனைத்து வைரஸ்களையும் கண்டறிய ஒரு வழியினால் முடியாது என்று நிரூபித்தார்.
4. இன்டர்நெட் (“internet”) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது. “ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்” என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது.
1971 ஆம் ஆண்டு, பாப் தாமஸ் என்பவர் “Creeper” என்றொரு புரோகிராம் எழுதினார். அப்போது வைரஸ் என இது அழைக்கப்படாவிட்டாலும், இதுவே, முதன் முதலாக வைரஸ் புரோகிராம் ஒன்றின் செயல்பாட்டினைக் கொண்டிருந்தது.
எப்படி புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டர்களுக்கிடையே பரவும் என்று காட்டுவதற்கு இந்த புரோகிராமினை அவர் எழுதினார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரைக் கெடுப்பது போல் எழுதப்படவில்லை. அதற்குப் பதிலாக “நான்தான் கிரீப்பர்; முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்” என்ற செய்தியை வெளியிட்டது. இது ARPANET இணைய இணைப்பில் ஒரு சர்வருக்கும் இன்னொரு சர்வருக்குமான இணைப்பில், காணப்பட்ட வெற்றிடத்தைக் கண்டறிந்து பரவியது.
எந்த கம்ப்யூட்டரில் இது பதியப்பட்டு செயல்படுத்தப்பட்டதோ, அதிலிருந்து தாமாகவே வெளியேறிச் செல்லும் தன்மையினையும் இது கொண்டிருந்தது. இறுதியாக கிரீப்பரைக் கண்டறிய “the reaper” என்னும் புரோகிராம் எழுதப்பட்டுச் செயல்படுத்திக் காட்டப்பட்டது.