கம்ப்யூட்டரை, பாஸ்வேர்ட் கேட்கும் ஸ்கிரீன் இல்லாமல், நேரடியாகத் திறந்து இயக்க
லாக் ஆன் ஸ்கிரீன் தேவை இல்லை என்றால், முதலில் Advanced User Accounts என்ற டயலாக் பாக்ஸைப் பெற வேண்டும். இது, நீங்கள் என்ன விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா எனில், ஸ்டார்ட் தொடங்கவும். பின்னர், netplwiz என டைப் செய்து என்டர் தட்டவும்.
விண்டோஸ் எக்ஸ்பி எனில், Start>Run சென்று, control user passwords2 என டைப் செய்து என்டர் தட்டவும்.
விண்டோஸ் 8 எனில், Search Charm பயன்படுத்தி netplwiz தேடவும். Apps பிரிவில், netplwiz என்பதன் மேல் கிளிக் செய்திடவும்.
டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், நீங்கள் எந்த அக்கவுண்ட் வழியாக பூட் செய்கிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு, Users must enter a user name and password என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்கையில், ஏற்கனவே கொண்டிருந்த பாஸ்வேர்டினை இருமுறை எண்டர் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
அவ்வாறு செய்து, ஸ்கிரீனை மூடிவிடவும். இனிமேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையில், எந்த பாஸ்வேர்டும் கொடுக்காமல், நேரடியாகக் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குச் சென்று விடலாம்.
இதன் பின்னரும் உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், பொதுவாக அது போல் நடைபெறாது, அது உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கேட்கும் பாஸ்வேர்ட் அல்ல. உங்கள் ஹார்ட்வேர் கேட்கும் பாஸ்வேர்ட் ஆகும்.
இதனை நிறுத்த செட் அப் ஸ்கிரீன் செல்ல வேண்டும். இணையத்தில் BIOS password எனப் போட்டு, உங்களுடைய பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரின் மாடல் எண் கொடுத்துப் பெறவும்.