நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான
வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின்
அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை
கண்டுபிடிப்பதும் சற்று கடினமே
சரி நண்பர்களே எனது தள முகவரி http://gsr-gentle.blogspot.com
இதை திறக்கவிடாமல் செய்வது எப்படி என பார்க்கலாம் நீங்கள் தடைய விரும்பும்
இனையதளத்தை குறித்துக்கொள்ளுங்கள் அதற்காக எனது வலைத்தளத்தை தடை
செய்யாதீர்கள்
இனி நீங்கள் செய்ய வேண்டியது டிரைவ் C:\-யை திறந்து அதில் WINDOWS
போல்டரை திறந்து அதில் system32 என்னும் போல்டரை திறக்கவும் இனி அதன்
உள்ளே drivers என்னும் போல்டர் திறந்தால் அடுத்ததாக etc எனும் போல்டர்
இருக்கும் அதனுள்ளே இருக்கும் hosts என்னும் பைல்தான் இந்த வேலையே செய்யபோகிறது (C:\WINDOWS\system32\drivers\etc\hosts)
என்ன நண்பர்களே hosts பைலை கண்டுபிடித்துவிட்டீர்கள் சரி அடுத்து என்ன அந்த
பைலை திறக்க இரண்டு முறை கிளிக்கவும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு
விண்டோ திறக்கும் இதில் Notepad என்பதை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும்
இனி அந்த பைலை திறந்தவுடன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் 127.0.0.1 என
டைப் செய்து அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தடைய நினைக்கும் இனையதளத்தின்
முகவரியை கொடுத்து விடவும் இந்த முறையில் எத்தனை தளங்களை வேண்டுமானாலும்
முடக்கலாம்
அடுத்த தளத்தை சேர்க்க நினைக்கும் போது
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.1 www.google.com
இப்படியும் சேர்க்கலாம் இல்லையென்றால் இப்படி எழுதினாலும் தவறில்லை
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.2 www.google.com
என்ன நண்பர்களே எல்லாம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏதேனும்
சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும் அடுத்த பதிவு காணாமல் போன
கண்ட்ரோல் பேனல்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின்
சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?
பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை
பகிர்ந்து கொள்ளுங்கள்