மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட ‘பேட்டரிதிறன்’ தான். நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு.சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.நீங்க
கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த
மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க,
2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு
குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது
ரொம்ப முக்கியம். இந்த‘அளவுகுறியீடு’பேட்டரியோட
பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க
தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான்
நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ்
விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல
இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.
இப்படி
புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த
கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு
ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு
காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல்
தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும். அடுத்தடுத்த
முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே
சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு
உழைக்காது.
உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.
அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.உங்க
மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா
(default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை
அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.
மொபைல்ல
பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும்.
பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக்
கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.மொபைலோட
திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல்
உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும்
சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.
நாம
ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3
பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம்
போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின
பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க
வேணாம்.
எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதே மாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.
நம்மல்ல
நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள்
தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரோம ரொம்ப
தப்பு,இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை
செய்யாம போயிடும்.
இன்டர்நெட்
யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல
இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம்
தீர்ந்து போகும்.
அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.
கூடுமானவரைக்கும்
சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல
யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலியான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.இப்படிப்பட்ட சின்னசின்ன
விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட
பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும.