முகநூலுக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரபிக்கப்பட்டதே கூகுள்+ ஆகும்.
இதன் மூலம் படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்கள்
போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இதில்
பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறு நம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்
நமக்கு பிடித்தவையாக இருக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் அரிதானவையாக
இருக்கும். அவற்றை நம்மால் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் அவற்றை நம்மால்
தரவிறக்கி பயன்படுத்த முடியாது. இவ்வாறு கூகுள்+ உள்ள படம் மற்றும்
வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி ஒன்று உள்ளது இதன் மூலம் எளிமையாக
வீடியோ மற்றும் படங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை இணையத்தின் உதவியுடன் குரோம் உலவியில்
இணைத்துக்கொள்ளவும். பின் ஒருமுறை உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுடைய கூகுள் கணக்கை திறக்கவும். பின் உங்களுடைய கூகுள்+ யை ஒப்பன்
செய்யவும்.


பின் படம் மற்றும் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான ஐகான்கள் ஒவ்வொரு படம்
மற்றும் வீடியோவிற்கு கீழே இருக்கும், அதை பயன்படுத்தி படம் மற்றும்
வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்