வன்தட்டுக்கள் எத்தனை வந்தாலும் எமக்கு ஒரு பயம் உண்டு நம்ம ஹர்ட்டிஸ்க்
எப்ப வைரஸ் அடிச்சு நாசமாக போகுதோ என்று அதற்காக நாம் எத்தனையோ வழிகளை
தேடிக்கண்டு பிடித்து பல முயற்சிகளை செய்கின்றோம் எதற்காக என்றால் எமது
தரவுகளை பாதுகாப்பதற்காகவும் சேமிப்பதற்காகவும், இது இவ்வாறு இருக்க கூகிள்
நிறுவனம் தனது புதிய சேவை ஒன்றை தந்துள்ளது உங்களில் எத்தனை பேருக்கு
தெரியும்? ஆமாங்க ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் ஜிமெயில் ஐ வந்தட்டாக பயன்
படுத்தலாம் என்ற புதிய விடயம் உங்களுக்கு தெரியுமா?
இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக
காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(hard disk) பயன்படுத்த
முடியும்.
இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும்.
இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப்
பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை
மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு
அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
2. தற்போது உங்களது mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம்
காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை
தெரிவு செய்யவும்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.
4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க
செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை
தெரிவு செய்யவும்.