நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி
மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி
பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில
நேரங்களில் தேவைப்படும்.
இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்
இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி
கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை
படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட்
செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன்
அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து
ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.
இனி அடுத்ததாக பார்க்க போவது Key Tweak இதை
தரவிறக்கம் செய்தபின் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். கணினியில் நிறுவ
ஓரிரு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்வதில்லை. நிறுவல் முடிந்ததும்
மென்பொருளை இயக்க தொடங்கினால் கீழிருக்கும் படம் போல திறக்கும் இதன் வழியாக
நீஙக்ள் ஒரு கீயை வேறொரு கீயாக மாற்றலாம் வேண்டுமானால் அதை மொத்தமாக
முடக்கி விடலாம் சரி பிறிதொரு நேரத்தில் செட்டிங்ஸ் மாற்ற நினைத்தால்
மீண்டும் டிபால்ட் செட்டிங்கஸ் கொண்டு வரும் வழியும் இருக்கிறது
பயன்படுத்தி பாருங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின்
கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு
பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய
கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.