Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, November 12, 2016

காலண்டர்கள் எப்படி உருவானது?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை  வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!

கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.

இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.

மாதங்களின் பெயர் வரலாறு:

ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.

ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது

ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது

ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.

அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.

நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.

டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.


இந்திய தேசியக் காலண்டர்

கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.

தமிழ்க் காலண்டர்:

சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு

இஸ்லாமியக் காலண்டர்:

முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது

ஜூலியன் காலண்டர்

கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே. 
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u