உள்ளங்கையில் ரேகைகள் எதற்கு?
எமது உடலின் தோலில் உள்ளங் கால்களிலும் உள்ளங் கைகளிலுமே ரேகைகள் நிறைந்து காணப்படுகின்றன. உடலின் ஏனைய பாகங்களிலுள்ள தோலில் ரேகைகள் இருப்பதில்லை. அவை மிருதுவாகவே காணப்படுகின் றன. உள்ளங்கைக்கும் உள்ளங்காலுக்கும் இப்படியொரு விசேடம் ஏன்?
கூர்ப்பினால் வந்துள்ள இசைவாக்கமே இதுவென உயிரியலாளர்கள் கூறுகின்றனர். தரையில் நடப்பதற்கு உராய்வு இல்லாமலிருக்க வேண்டும். அதற்கான தவாளிப்புதான் உள்ளங்கால் ரேகைகள். அதுபோன்றுதான் உள்ளங்கை ரேகைகள் பற்றிப் பிடிப்பதற்கு உதவு கின்றன. உள்ளங்கையில் ரேகைகள் இல்லாது போனால் பற்றிப் பிடிக்கும் போது வழுக்கி விடுவதற்கு இடமுண்டு. இதனைத் தடுப்பதற்கே ரேகைகள்.