Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, November 12, 2016

அவர்கள்

என்னை ஏன் உனக்கு புடிக்கல?” ங்குற கேள்வி அம்மா, அண்ணன், தோழன், தோழி, காதலி – ஒவ்வொருத்தர் கிட்ட கேக்குறப்பயும் வேற வேற அர்த்தங்கள் தான் தரும். ஒரு கேள்வி, ஒரு சொற்றொடர் – எல்லாம் ஒவ்வொருதரிடமும் வேறு வேறு தாக்கங்கள் தான் ஏற்படுத்தும். ‘நான் ஒரு பெண்ணை விரும்புறேன்’ ங்குற அதே வாக்கியம் நண்பன் கிட்டயும், அப்பா கிட்டயும் ஒரே தாக்கத்த ஏற்படுத்தணும்- னு இல்ல...நண்பன் சிரிப்பான் - சத்தமாக.அப்பா முறைப்பார் – கூர்மையாக...
“ஃப்ரெண்டு” என்ற ஒரு குடைக்குள் அடக்கி விடுகிறோம் ‘உறவினர்’ என்ற குடைக்குள் வராத அனைவரையும். அத்தை, மாமா, அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், பாட்டி, தாத்தா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா என்றெல்லாம் பிரித்து காட்டிய மொழி ஏனோ தோழன் என்று ஒரே சொல்லை மட்டும் கொடுத்திருப்பது கவலையே.நண்பர்களுள் பலவிதம் உண்டு. “என்னை ஏன் உனக்கு பிடிக்கல?” – நட்பும் உண்டு; “என்னை ஏன் உனக்கு இப்போ மட்டும் புடிக்கல?” என்று கேட்கும் நட்பும் உண்டு... ஆனால் ஓரிரு நண்பர்கள் விடை கூறும் போது தான் ‘இதை நாம மாத்திக்கணும்’ – ங்குற எண்ணமே வருது. அப்படியாயின் அந்த ஒரு சிலர்க்கு நாம் ஏன் தனி சொந்தம் வைக்க கூடாது???‘நெருங்கிய நண்பர்கள்’, என்று கூறலாம். மறுபடியும் ஒரு கேள்வியிலோ, பதிலிலோ அவர்கள் இன்னொரு பிரிவிற்கு சாதாரணமாக சென்று விடுவார்கள். “இது தான்டா புடிக்கல”, - இது ஒரு ரகம். “இத மாத்திக்க, ஐ வில் பி கமஃபர்டபிள்” – இது ஒரு ரகம். “எனக்காக இத மாத்திக்கோடா, ப்ளீஸ்” – இது இன்னுமொரு ரகம்.முதலில் நாம் கண்ட கேள்வியின் இடம், பொருள், ஏவல் வேற்றுமை இந்த நண்பர்களுக்கும் உண்டு. பிறகு ஏன் இந்த மொழி ‘நண்பன்’ என்று மட்டும் சொல்லி வைத்தது??? ஒரு வேளை, ஒருவன் தான் இருக்க முடியுமோ என்று யோசித்தால், ‘நண்பர்கள்’ என்றதற்கு பன்மையும் வைத்தனர்.இந்த ஒரு குடை அடுக்களில் ‘ப்ரையாரிட்டி’ – முன்னுரிமை என்பது இடஒதுக்கீடு இன்றி வந்து சேர்கிறது. சிலரை நெஞ்சில் வைக்கிறோம்... சிலரை நெஞ்சில் கரைக்கிறோம்... ஒரு சிலரால் அந்த நெஞ்சையே செய்கிறோம்... “இங்க வா!” என்று சொல்வோரும், “இங்கே வர முடியுமா?” என்று கேட்போரும் நண்பர்களே... ஆனால் முன்னுரிமை வருவது ஏனோ “இங்க வா!” என்பவனிடம் தான். “என்ன செய்யலாம்?” என்ற கேள்விக்கு, “உனக்கெது கம்ஃபர்டபிளா இருக்கோ, அப்படியே பண்ணு”, ந்குரவனை விட, “இப்புடி பண்ணு டா!”, என்று முடிப்பவன் சிறப்பு... ஒரு சிலர் உள்ளனர். அரை மணி நேர பேச்சிற்கு பிறகு, “இது என் ஐடியா, உஅன்க்கேப்படி விருப்பமோ அப்படியே செய்” என்று சொல்வோர். “ஓடியே போய்டு”, ங்குறது தான் இவர்களுக்கான என்னோட பதில்.ஒரே பாலினராக இருக்கயில் நட்புக்கு பங்கமில்லை. இதற்கு பொறாமை, அஸம்ப்ஷன்ஸ், ஒரே சிந்தனை போன்றவை காரணமாக இருக்கலாம். ஒரே பால் நண்பர்களிடம் நிறைய பேசலாம், பேச காரணமும் இருக்கும், அந்தரங்கம் பகிர்ந்து கொள்ளலாம், ‘லவ் யூ’ என்று பயப்படாமல் சொல்லலாம் (இன்று ‘கே’ லாம் வந்தாயிற்று. அதை தவிர்த்து), மடியில் சாய்ந்து துயில் கொள்ளலாம்... முத்தமிடலாம்... ஒன்றாக சினிமாவுக்கு போகலாம்... இப்படி ஏதும் செய்யலாம். சமூகம் ஏதும் சொல்வதில்லை; பலமுறை ‘பாச்சலர்’களை ‘வீடு இல்லை’ என்று விரட்டுவதைத் தவிர.ஆண்-பெண் நட்பில் ஆண்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் வெவ்வேறு விதமான சூழல் நிலவும். ஆண்களுக்கு புரியாது; புரிந்தோர் பெண்ணோடு நண்பராய் இருப்பவர். பெண்களுக்கு மகிழ்ச்சி. இன்னொரு பலிகடா கிடைத்து விட்டதே என்றோ என்னவோ! ஆண்கள் மத்தியில் ஆண்-பெண் நட்பு என்பது இயலாதது.“கல்யாணம் பண்ணிக்கலாமா?” – அவன்.“என்ன புதுசா???” – அவள்.“புடிச்சிருக்கு ல?” – அவன்.“புடிச்சிருக்குறவங்கள எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா???” – அவள். கேலியுடன்.“போடி”, என்று முடிக்கும் ஆண்கள் சினிமாவில் மட்டும் தான். அவன் அதை மனதில் ஆம் என பதில் எதிர்பார்த்துக் கொண்டு கேட்பதில்லை. அவளை குச்சி மேல் நிறுத்தி பார்க்கிறான். அவளோ ‘கதக்’ ஆடுகிறாள். இருவருக்கும் வெற்றி. தோற்றவர் வென்றார்- ஊடலில். இது அதனினும் சிறப்பு அன்றோ???பெண்களுக்கு ‘செல்ஃப் கான்ஷியச்னஸ்’ எனப்படும் தன்னிலை உணர்தல் மிக அதிகம். அவர்களுக்கு எது லிமிட் என்று தெரியும். ஆண்களை அந்த எல்லைக்கு அப்பால் விட மாட்டார்கள். பல நல்ல குணங்களைக் கற்று தருவார்கள். பொறுப்பு, கவனம், முடிவு எடுத்தல், நகம கடிக்காமை (வள்ளுவர் விட்ட அதிகார்ந்களுள் ஒண்ணு) போன்றவற்றில் துணை நிற்பார்கள். எல்லா ஆணுக்கும் பின்னால் என்றல்லாமல், ஒரு சிலர் கூடவே நின்று அவர்கள் வெற்றியை எந்த அசூயையும் இன்றி ரசிப்பவர்கள் பெண்கள்.‘அவன்’ க்கு அக்கறை அதிகம். அவள் ‘முடியல’ என்ற வார்த்தை கேட்டால் இவனுக்கு பொறுக்காது. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் முன் வந்து நிற்பான். ஹனுமான் போல... நினைத்தால் போதும் – முன் வந்து நிற்பான். அந்த பாதுகாப்பு, அந்த செக்யூரிட்டி – அதை எந்த பிரதிபலனும் எதிர்பாராது செய்வர்.இப்படி எல்லாம் செய்ய அவன் கணவனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது பெண்கள் மனநிலை. இங்கே காதல் இல்லை. காதல் பரிதாபத்தால் வருவது அல்ல. இவன் அவளுக்கு சொல்லும் ‘லவ் யூ’ வில்பாசமும், உன்னுடன் இருக்கிறேன் என்கிற உணர்வும் இருக்கிறது. அவளுடைய பதில் புன்னகையில் ,’உன்னை நம்புறேன் (கவுத்துடாத)!’ என்கிற பொருளும் இருக்கிறது.அமைதியான மாலை வேளையில், சென்னைஇன ‘எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்தால், மாலையை ரசித்தபடி, வாயிலில் நின்று பயணம் செய்யலாம். அப்பொழுது ஏதேனும் ஒரு ஸ்டேஷனில், ஒருவன் ஒரு பெண்ண தோள் மீது கைப் போட்டு அமர்ந்திருப்பான். அப்போது, அவன் அவளுக்கு எஸ்.எம்.எஸ். செய்வான்,“தோளில் கை போட்டு அமர்ந்திருக்கிரானே,‘நாங்கள் தோழர்கள் அல்ல,காதலர்கள்’ என்று பறைசாற்றுகிரானோ???” என்று.
அந்த இடைவெளி தான் நட்புக்கும், நீங்கள் காதல் என்று நினைக்கும் அதற்கும்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u