Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Wednesday, November 2, 2016

போட்டோ பிரதி இயந்திரங்கள் இயக்குபவர்கள், அருகே இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது......

போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி?

நீங்கள் பிரதி எடுக்க இருக்கும் அசல் பொருளிலிருந்து ஒளித்தெறிப்பு அடைந்து, அவ்வொளியை உணரச்செய்யும் மின் உருளை அல்லது பெல்ட் இல் வீழ்ந்து மறை பிம்பமாக மாறும். பின் அது பேப்பரில் பிரதியாக அச்சாகும். இந்தச் செயற்பாட்டின்போது சூழலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் அதனால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்.


எத்தகைய பாதிப்புகள்?


ஓசோன் போட்டோப் பிரதி எடுக்கும் செயற்பாட்டின் போது சிறிதளவு ஓசோன் வாய்வு வெளியேறுகிறது. மென்மையான இனிய மணத்தைக் கொடுக்கும் இவ்வாயு நச்சுத் தன்மை வாய்ந்தது. பிரதி பண்ணும் போது விம்பம் உருளையிலிருந்து பேப்பர் தாளுக்கு மாறும்போது உருளையில் உள்ள பொருட்களின் சிதைவினால் ஓசோன் உற்பத்தியாகிறது.

ஓசோன் விரைவில் சிதைந்துவிடும்.

சுமார் 6 நிமிட நேரத்தில் அரைவாசி அழிந்துவிடும். (half-life of six min- utes) ஆயினும் அதன் செறிவு சூழலில் எந்தளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே பாதிப்பு ஏற்படும். சாதாரணமாக 0.1 0.02 parts per million (ppm) இருக்கும்.

இது 0.1 02 parts per million மேல் அதிகரிக்கக் கூடாது.

போட்டோப் பிரதி இயந்திரமருகே உற்பத்தியாகும் ஓசோன் குறைந்தளவு நேரத்தில் சிதைந்துவிடும் என்பதால் ஆபத்து அதிகமில்லை. அதிக உஷ்ணம் இருந்தால் விரைவில் அழிந்துவிடும். நேரம் செல்லவும் அழிந்துவிடும். எனவே அதிகளவு பிரதிகளை குறுகிய நேரத்தில் எடுக்கும் போதும், சூழல் குளிர்மையாக இருக்கும்போதும், காற்றோட்டம் குறைவாக இருக்கும்போதும் ஓசோனின் செறிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க் கலாம்.

சூழலில் அதன் செறிவு இது 0. parts per million (ppm) க்கு மேல் அதிகரித்தால் பக்க விளைவுகள் தோன்றும். கண், மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய் ஆகியவற்றை உறுத்தும். இதனால் அவற்றில் அரிப்பு, எச்ரிசல் போன்றவை ஏற்படும். அத்துடன் தலையிடி, மூச்செடுப்பதில் சிரமம், களைப்பு, தற் காலிகமாக மணங்களை உணர முடியாது போன்ற தாக்கங்களும் ஏற்படும். இதன் செறிவு 10 ppm அற்கு அதிகமானால் உயிரா பத்தாகும்.

ஆயினும் சில ஆய்வாளர்கள் ஓசோன் தாக்கமானது 0.1 parts per million (ppm) அளவில் கூட நீண்ட காலத்திற்கு தொடர்ந்திருந்தால் 

* விரைவில் மூப்படைதல், 

* குறைந்த ஆயுள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள்.

டோனர் பவுடர் சில வகை போட்டா பிரதி இயந்திரங்கள் வெவ்வேறு வகையான கார்பனைப் பயன் படுத்துகின்றன. பிரதி பண்ணும் செயற்பாட்டில் வெளிப்படும் கழிவுகள் அதிகமாகும் போது சுயமாக செயற்பாட்டை நிறுத்தும்.

ஆனால் அத்தகைய பொறிறைகள் இல்லாத விடத்து அவை சுற்றாடலில் பரவும். பிரதி பண்ணும்போது மட்டுமின்றி பராமப்பு வேலைகள் (Maintenance), மீள் நிரப்பல் (Refilling) ஆகியவற்றின் போதும் அதிகம் வெளிப்பட்டு சூழலை மாசுபடுத்தும்.

* இவை சுவாசக் குழாயை அழற்சியடையச் செய்து மூக்கரிப்பு, தும்மல் இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

* ஆரம்ப கால டோனர்களில் Nitro pyrenes and Trinitrofluorene போன்ற இரசாயனங்கள் இருக்கும். இவை புற்றுநோய் மேல் ஒலியெழுப்பும். இருந்தபோதும் வேலைத்தலங்களில் இது 75dB அளவிற்கு கீழ் இருப்பதே விரும்பத்தக்கது.

சத்தம் அதிகமாக இருந்தால் 

* காது இரைச்சல் ஏற்படுவதுடன் தற்காலிகமாக செவிப்புலன் இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆயினும் இரைச்சல் மிக அதிகமான அச்சகங்களிலேயே இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சாதாரண வேலைத்தலச் சுழலில் பெரும் பாதிப்பு ஏற்படாது. 

* அருகில் உள்ள ஏனைய ஊழியர்களுக்கு எரிச்சலையும் மனஅழுத்தத்தையும் கொடுத்து அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி வேலையைக் குழப்பும்.

ஒளிவீயமான ஒளிவிளக்குகள் பெரும்பாலான போட்டோ கொப்பி இயந்திரங்களுக்குள் இருக்கின்றன. இவை ஆபத்தானவை அல்ல. ஆயினும் மூடியை திறந்தபடி பிரதி பண்ணினால் அவற்றின் ஒளி கண்ணுக்கு அயர்வை உண்டாக்கும்.

தலையிடியையும் ஏற்படுத்தலாம் எனவே மூடி வைத்து பிரதி பண்ணுவது முக்கியம். வேலை செய்பவரின் உயரத்திற்கு ஏற்ப போட்டோ பிரதி இயந்திரம் இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியும்.

நீங்கள் அவதானிக்க வேண்டியவை; 

குறைந்தளவு ஓசோனை வெளியிடும் இயந் திரங்களைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

அல்லது வெளியேறும் ஓசோனை உறிஞ்சுவதற்கு Activated Carbon பில்டர் கொண்டவற்றை வாங்க வேண்டும். இது ஓசோனை 100 சதவிகிதம் உறிஞ்சும் வல்லமை கொண்டது. ஒழுங்கான பராமரிப்பு இருந்தால் ஓசோன் உற்பத்தியாவது குறைந்து விடும். இயந்திரத்தை இயக்கும்போது வித்தியசமான வாடை அடித்தால் அது ஓசோனாக இருக்கலாம். காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்திக்க வேண்டும்.

போட்டோ கொப்பி இயந்திரம் வேலை செய்யும் அறையும், அது வைக்கப்பட்டுள்ள மேசையின் சுற்றாடலும் போதிய காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.

இயந்திரம் வேலை செய்யும்போது அதன் மூடி மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரதி பண்ண வேண்டிய மூலப் பொருளை மூட முடியாதிருந்தால் இயக்குபவர் தனது கண்களை அதன் ஒளி படாதவாறு வேறு பக்கமாகப் பார்க்க வேண்டும்.

போட்டோ கொப்பி இயந்திரம் இயக்குநருக்கு வசதியான உயரத்தில் வைக்கப்பட்டிருப்பதுடன், அருகிலேயே பேப்பர்களை வைப்பதற்கான இடவசதியும் இருக்க வேண்டும்.

நவீன காலத்தில் கிடைக்கும் எல்லா வசதிகளுக்கும் பின்னால் சில அசௌகரியங்களும், உடல் நலத்துக்குக் கேடான அம்சங்களும் இருக்கக் கூடும். ஆபத்து இருக்கிறது என முற்றாக ஒதுங்கி சிரமமான வாழ்க்கை வாழ வேண்டியதில்லை. ஆபத்துகள் எவை என்பதைக் கற்றறிந்து அவற்றை நீக்கி வாழும் முறை களையும் கடைப்பிடித்தால் என்றும் நலமாக வாழலாம் அல்லவா? 
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u