Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Sunday, September 2, 2018

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.
Related image
சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.

தப்பிக்க வழிகள்!!

இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.

ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை

எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.

வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்

கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.

புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை...

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u