Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, December 3, 2016

மொபைல் போன்களில் 'அவசர நிலை பட்டன்' என்பது என்ன?

ஆங்கிலத்தில் Panic button என்று அழைக்கப்படும் 'அவசர நிலை பட்டன்' ஒன்றை அனைத்து மொபைல் போன்களில் கட்டாயமாக அமைத்து விற்பனை செய்திட வேண்டும் என இந்திய மத்திய அரசு ஆணை சென்ற ஏப்ரல் மாதம் வெளியானது. 

                            Related image



வரும் ஜனவரி 1 முதல் இது கட்டாயமாக அமலாக்கப்படும். அதே போல, 2018 ஜனவரி முதல் GPS எனப்படும் நம் இருக்கும் இடத்தைக் காட்டும் வசதியும் கட்டாயமாகத் தரப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சார்ந்து வெளியிடப்பட்ட இந்த ஆணையை, அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் பாராட்டியுள்ளன. பாதுகாப்பு கேட்கும் பட்டன் மட்டுமின்றி, பாதுகாப்பு தரும் காவலர்கள் சரியாகச் செயல்பட்டார்களா என்பதையும் இது காட்டிக் கொடுக்கும்.

இதற்கான கீ 5 அல்லது 9 ஆக இருக்கும். இதனை சாதாரண வசதிகள் கொண்ட மொபைல் போனில் கூட அமைத்துவிடலாம். ஆனால், ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் வசதியினை சாதாரண போன்களில் (Feature phones) அமைத்துத் தருவார்களா என்பது சந்தேகமே. இன்றும் கூட பெரும்பாலான சாதாரண போன்களில் ஜி.பி.எஸ். வசதி இருக்காது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்த வரை, இந்தியாவிற்கு மட்டும் இந்த அவசர நிலைக்கான பட்டனை வழங்கும் என்று தெரிகிறது. இந்நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான iOS 10.2 சோதனை தொகுப்பில் இது இருந்தது.

பின்னர், இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த பட்டன் வசதி நீக்கப்பட்டது. இந்த வசதியை, வரும் ஜனவரியில், இந்தியாவில் இயங்கும் தன் ஐபோன்களுக்கு மட்டும், ஆப்பிள் நிறுவனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது அனைத்து அவசர நிலைக்கான போன் எண்ணாக, 112 என்ற எண் அமலுக்கு வர உள்ளது. 
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u