எக்ஸெல் டிப்ஸ்... ஒரே டேட்டா.. அலகுகளை மாற்றும் வழிகள்
ஒரே டேட்டா - பல செல்கள்
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யப்பட்டிருக்கும்.
அலகுகளை மாற்றும் வழிகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு 'அடி' கணக்கில் டேட்டா அமைக்கப்பட்டது. இதனை மீட்டர் என்ற அலகிற்கு மாற்றுவது எப்படி? இதற்கு பொதுவான கட்டளை போதுமா? அல்லது தனி பார்முலாக்கள் அமைக்க வேண்டுமா?
எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கையில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B -யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B-யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்- கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன.
பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை
என்றால், Analysis ToolPak - னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.