நான் புகைப்படங்களை ஏற்றும்போதெல்லாம் பாதியிலேயே திடீரென ஹேங்க் ஆகிவிடுகிறது. ஏன் இப்படி என்று புலம்புபவர்களுக்காக இந்த டிப்ஸ்.
டிஜிட்டல் காமிரா வந்தவுடன், ஒரு அளவே இல்லாமல் எக்கச்சக்கமாக நாம் ஃபோட்டோ எடுத்து தள்ளுகிறோம். அவற்றை மொத்தமாக பவர்பாயிண்டில் ஏற்ற முயலும்போது இந்தச் சிக்கல் வரும். ஒல்லியான 3 பேர் ஒரு காரில் அமர்வதற்கும், குண்டான 3 பேர் அதே காரில் அமர்வதற்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த சிக்கலுக்கு காரணம்.
தற்போதைய டிஜிட்டல் காமிராக்களில் ஒரு புகைப்படத்தின் அளவு குறைந்தபட்சம் 3MB இருக்கிறது. எனவே 10 புகைப்படங்கள் என்றால் அதுவே 30MB ஆகிவிடும். முதலில் இந்த அளவை குறைக்க வேண்டும். அதாவது குண்டர்களை ஒல்லியர்கள் ஆக்க வேண்டும்.
ஃபோட்டோஷாப் அல்லது பவர் டாய்ஸ் ரீசைஸர் வழியாக, புகைப்படங்களின் அளவை 3MBயில் இருந்து 50-70KBக்கு குறையுங்கள். பிறகு அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணையுங்கள். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது தாமதமாகும்.
மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert -> Photo Album -> New Photo Album செல்லுங்கள்.
பிறகு Insert picture from ->File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் (Ctrl+A) கொடுத்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு, Picture Layout -> Create க்கு சென்று பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் ஒரு சில நொடிகளில் அனைத்து புகைப்படங்களும் உங்கள் பவர் பாயிண்ட் பிரெசென்டேஷக்கு தயார்.